இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
இருமொழியும் ஆன்றவரே தழீ இயினார் என்றால்இவ்
விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ.
--காஞ்சிப் புராணம்.
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்துசங்கத்
திருப்பிலே யிருந்து வையை யேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரேன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்.
--வில்லி பாரதம்.
மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
இறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே
அறைகடல் வரைப்பில் பாடை யனைத்தும்வெண் றாரியத்தோடு
உறழ்தரு தமிழ்த் தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்.
--சீகாளத்திப் புராணம்.
தமரநீர்ப் புவன முழுதொருங் கீன்றாள்
தடாதகா தேவியென் றொருபேர்
தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ
சவுந்தர மாறனா னதுவுங்
குமரவேள் வழுதி உக்கிர னெனப்பேர்
கொண்டதுந் தண்டமிழ் மதுரங்
கூட்டுண வெழுந்த வேட்கையா லெனிலிக்
கொழிதமிழ்ப் பெருமையா ரறிவார்.
--குமரகுருபரர்.
வேலையில் வீழ்த்த கல்லு மென்குடம் புகுத்த வென்புஞ்
சாலையிற் கொளுவுந் தீயுந் தரங்கநீர் வையை யாறுஞ்
சோலையாண் பனையும் வேதக் கத வமுந் தொழும்புகொண்ட
வாலையாந் நீ தமிழ்ப்பூஞ் செல்வி..............
--குற்றாலத் தலபுராணம்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே