ஆரிய நன்று தமிழ் தீதெனவுரைத்த, காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்-சீரிய, அந்தண் பொதியில் அகத்தியனா ராணையால், செந்தமிழே தீர்க்க சுவாகா." எனக் காட்டப்பட்டுள்ள உதாரணச் செய்யுளாலும் இவ்வகை உணர்ச்சி தமிழ் நாட்டில் நீண்டகாலம் உள்ளதென்பதை நன்கு அறிக. தமிழின் பெருமையை விளக்கும் சில பாடல்கள் தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலனை யழைத்ததும், எலும்புபெண் ணுருவாக் கண்டதும், மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர். விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள் வடமொ ழிக்குரைத் தாங்கியன் மலய மாமுனிக்குத் திடமு றுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல் மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ. கடுக்கவின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி அடுக்கவந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு விடுக்கவாரமென் கால்திரு முகத்திடை வீசி மடுக்கவுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ. --திருவிளையாடற் புராணம். வடமொழியைப்1 பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற் கடல்வரைப்பி னிதன்பெருமை யாவரே கணித்தறிவார். 1. வரலாறு அறியப்படாத அக்காலத்தே புலவர்கள் தமிழ் மொழி வடமொழிக்கு இணையானது, அதனை ஒத்த பெருமையுடையது என நாட்டுவதற்குச் சில தெய்வீக நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கையாண்டனர். வரலாற்றளவில் வடமொழி தமிழுக்கு அண்மையிலும் நிற்க முடியவில்லை. |