தமிழ் உணர்ச்சிக்கு எதிர் உணர்ச்சி வேதகாலத்தில் தாசுக்களுக்கும் ஆரியர்களுக்கும் மிகுந்த வயிரம் உண்டாயிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழை ஆரியத்திலும் தாழ்த்திக் கூறும் கட்சியொன்றும் தமிழ் நாட்டில் நீண்டநாள் தொடர்ந்து வராநின்றது. சமயகுரவர் காலத்தும் இவ்வகை உணர்ச்சியிருந்தமையினாலேயே " ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் " எனத் தேவாரத்துட் கூறப்படலாயிற்று. இவ்வாறு கூறப்பட்டது இரு கட்சிகளையும் சந்து செய்தல் பொருட்டேயாகும். தமிழை இழிவுபடுத்தும் கொடுமை நாளுக்குநாள் வளர்வதாயிற்று. அதிற்பட்டு மயங்கிய மக்கள் தமிழின் உயர்வையும் அதன் இன்றியமையாமையையும் உணராது அதனை இகழ்வாராயினர். கல்வியிற் பெரிய கம்பனே தேவபாடையினிக் கதை செய்தவர் என மொழிந்து வட மொழிக்குப் பணிவு காட்டுகின்றமை காண்க. பரஞ் சோதி முனிவர், சிவஞான முனிவர் குமரகுருபரர் முதலாயினோர் அம்மக்களின் பேரறியாமைக் கிரங்கி அவர்கள் மனங்கொண்டு தமிழிற் பற்றடையுமாறு தமிழின் பெருமையைப் பல அரிய இனிய தெள்ளிய பாடல்களால் விளக்கிப் போந்தனர். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணீயத்திற் கூறிய தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல்களால் அக்காலத்துத் தமிழுக்கு எதிரான உணர்ச்சி எவ்வளவு முனைத்து நின்றதென்பது தெள்ளிதில் விளங்கும். இன்றும் அவ்வுணர்ச்சி சாம்பர் பூத்த நெருப்புப் போல, பலர் உள்ளத்தே சுரந்து கிடவாமல் இல்லை. தொல் காப்பிய பொருளதிகார உரையில் (பொருள். 490) |