எழுதுதல் போல்வன; செவி வழக்கில்வரும் கற்பனைக் கதைகள் போல்வன; பொய் எனப்படாது உலகியலோடியன்று நகை விளைக்கக்கூடிய கதைகள் போல்வன. இவ்வகைய நூல்கள் ஒன்றேனும் இன்று காணப்படவில்லை. பற்பல காரணச் செறிவால் மாண்ட தமிழ் நூல்களோடு அவையுங்கூட மடிந்தனவாகலாம். | அரப்பாவிற் கண்டுபிடிக்கப்பட்ட இதய வடிவமுள்ள பெண்கள் கை வளை | கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகள் என்னும் அரசப் புலவர் பாடிய சிலப்பதிகாரத்தில் உரைப் பாட்டுக்கள் சில காணப்படுகின்றன. அவை அடிவரையறையின்றிப் பாட்டு நடையில் அமைந்துள்ளன. அவை பொரும்பாலும் ஆசிரியத்தை ஒத்துள்ளன. கி. பி. 1-ம் நூற்றாண்டளவில் செய்யப்பட்ட இறையனார் களவியல் உரை கி. பி. 7-ம் நூற்றாண்டளவில் எழுதி வைக்கப்பட்டது. அவ்வுரைநடையின் சில பகுதிகள் செய்யுள்நடை போற்றோன்றினும் பெரும்பகுதி சிறுசிறு வசனங்களாக அமைந்துள்ளது. பெருந்தேவனார் பாரதத்தின் இடையிடையே, மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட வசன நடை இதன்பின் எழுந்தது. இவ்வசன நடை, பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனார் (கி. பி. 9-ம் நூற்றாண்டு) செய்ததாகாது. கி. பி. 12-ம் நூற்றாண்டுக்குப்பின் எழுந்த உரை நடைக்கு எடுத்துக்காட்டு அடியார்க்குநல்லார், பேராசிரியர், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலானோர் உரைகளாகும். பிற்கால உரைநடைக்கு எடுத்துக்காட்டு மாதவச் சிவஞான யோகிகளின் சிவஞானபோத மாபாடியமாகும். த. இ.-II--19 |