அஃது உள்ளதென்றும், அஃது இன்றும் மலாய ஆசியாவிற் காணப்படுகின்ற தென்றும் கூறுவர். முண்டா மொழிகளை வழங்குவோர் பொதுநிறமுடைய கொல்லியர் (Kols) ; இவர்கள் நெளிந்த (சுருண்ட தல்லாத) தலைமயிருடையர்; பழைய பர்மிய அசாம் இந்து சீன ஆஸ்திரேலிய மக்களுக்கும் இலங்கை வேடருக்கும் இனமுடையோர். சந்தாத்தீவின் பந்தின் (Bantin) என்னும் சாதியினரும் செலிபிசிமக்களும் இவ்வினத்தைச் சார்ந்தோர் என வெக்ஸ்பொன்ட் (Wxbonds) என்பார் காட்டியுள்ளார். இம்மக்கள் இருண்ட நிறமுடைய திரவிடவெள்ளத்திற் புகுந்து மறைந்தனர். திராவிடரின் உற்பத்தியை அறிய முடியாமையினால், ஆராய்ச்சியாளர் அவர்களை ஆஸ்திரேலியர், எதுருஸ்கானியர் (பழைய இத்தாலிய மக்கள்) பின்னிய உக்கிரியர் (Finno-ugrians) களோடு இணைத்தனர். திராவிடமென்பது தமிழ் என்பதன் உச்சரிப்பு வேறுபாடு." சூடியநாகபுரியில் முண்டா மொழியை வழங்கும் ஓரியர் என்னும் மக்களுக்கு குரங்குக்கொடியும், அதே குலக் குறியும் (Totem) உள்ளன என்றும், அவைபற்றி இவர்கள் குரங்கர் அல்லது குரங்குகள் என இராமாயணத்திற் கூறப்பட்டனர் என்றும் முண்டரும் அவர் நாடும்1 என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது. 1 . The Mundas and their country - Sarat Chandra Roy. |