பக்கம் எண் :

தமிழ் இந்தியா3

தமிழ் இந்தியா
 
தோற்றுவாய்


  தென்னிந்தியாவின் நில அமைப்பு உலகிற் பழமையுடையது 1 . அதன் வரலாறும் அவ்வகையினதே. அதன் ஆராய்ச்சி கல்லில் நார் உரித்தல் போன்ற கடுமையுடையதாதலின் அதனை ஆதிமுதல் ஒழுங்குபடுத்தி எழுதினார் யாருமில்லை 2 . வரலாற்று ஆசிரியர்கள் இதுவரையில் தென்னிந்தியாவின் பழைய வரலாற்றினை எழுத முயன்றிருக்கிறார்கள் என்று மாத்திரம் கூறலாம். உலக மக்களின் பழைய வரலாற்று ஆராய்ச்சியில் தென்னிந்திய பூர்வ வரலாற்றினை விளக்கும் பகுதிகள் இடையிடையே காணப்படுகின்றன. அவ்வகை ஆதாரங்களையும் வரலாற்று ஆசிரியர்கள் ஆங்காங்குக் காட்டியுள்ள குறிப்புகளையும் துணைக்கொண்டு இந்நூல் வரையப்படலாயிற்று. வரலாறு கற்பனைக் கதை போலக் கூறத்தக்கதன்றாகலின் இன்றியமையாத இடங்களில் சற்ற மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.


  1. Deccan Itself one of the most ancient geological formations in the world has since the dawn of history the home of the Dravidians, the oldest of the Indian races--The people of India-P. 2, - S. H. Risely.

  2. People want to know Something about Dravidian Culture. South India is a land of wonders; but the wonder of wonders is that the history of South India has not yet come out-Bhandarkar, Hindu-March. 1-1939.