இயல் - 1 தொன்மைக் காலம் தமிழ் இந்தியாவின் பழைய நில அமைப்பு நில நூலார் பழையகாலத்து இப்பூமியிற் றோன்றியிருந்த கண்டங்களையும் கடல்களையும்பற்றிக் கூறுகின்றனர். அவர்கள் கூறுகின்றபடி, கிழக்குத் தீவுகள் ஆஸ்திரேலியா இந்தியா ஆப்பிரிக்கா முதலிய தேசங்கள் ஒரு பெரும் நிலப்பரப்பாக விளங்கின. அப்பெரிய நிலப்பரப்பிற்கு அவர்கள் கொந்வானா (Gondwana) எனப் பெயர் வழங்கியிருக்கின்றனர். மேற்குத்தொடர்ச்சிமலை கொந்வானாக் கண்டத்தைக் கிழக்கு மேற்காகப் பிரித்தது. அராவலி மலைகளுக்கு வடக்கே கடல் இருந்தது. கொந்வானாக் கண்டத்தின் பெரும்பாகம் சிறிது சிறிதாகக் கடலுள் மறைந்தபோது இந்தியா ஆப்பிரிக்கா கிழக்கிந்தியத் தீவுகள் என்பன கடலாற் பிரிக்கப்பட்டன. இராதகுமுத்முக்கேசி என்பவர் தென்னிந்தியாவின் பழைய நில அமைப்பைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார். அது வருமாறு: "நில நூலார் கொந்வானா எனப் பெயரிட்டுள்ள பெரிய பூகண்டத்தின் மிச்சமாக உள்ளது இந்திய நாடு. அப் பூகண்டம் தென்னாப்பிரிக்கா முதல் ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா வரையில் பரந்து கிடந்தது. இஃது அப் பகுதிகளில் கல்லாகச் சமைந்து கிடக்கும் பிராணிகள் தாவரங்களின் சின்னங்களைக் 1 கொண்டு அறியப்படுகின்றது. மேற்குத் தொடர்ச்சிமலை கொந்வானாக் கண்டத்தைக 1. Fossil remains. |