பக்கம் எண் :

32தமிழ் இந்தியா

அதன் முறைகள் எழுதப்பட்டன. 1 கங்கை ஆற்று வெளிகளிலுள்ள மக்களும் ஆரிய மக்களும் விவாகக் கலப்பால் ஒற்றுமையடைந்து வலுவடைந்தனர். பிராமணங்களுக்குப்பின் ஆரணியங்கள் எழுதப்பட்டன. ஆரணியங்கள் என்பன காட்டில் வாசஞ் செய்யும்போது படித்தற்குரிய பாடல்கள். வேத பாடல்கள் செய்யப்படுகின்ற காலத்தில் காட்டிற்போய்த் தவஞ்செய்யும் வழக்குக் கூறப்படவில்லை என்றும், இவ்வழக்குப் பூர்வ குடிகளின் முறையைப் பின்பற்றி ஆரிய மக்களாற் கைக் கொள்ளப்பட்டனவென்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். 2

பாரதம்


  ஆரியர் கங்கைச் சமவெளிகளில் இராச்சியங்களைத் தாபித்த காலத்திலேயே பாரதப்போர் நிகழ்ந்தது. இது கி. மு. 1300 வரையில் நிகழ்ந்ததெனப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. பாரதப் போரில் கலந்து கொண்டவர்கள் தமிழர்களே. புறநானூற்றில் தருமனைப் புகழ்ந்து


  1. சற்லி ஆற்றை கடக்க முன் உள்ள சமயக் கொள்கைகளில் இந்திய பூர்வ மக்களுக்கு ஆரியர் கடமைப்படவில்லை என்பது உண்மையே. சற்லி ஆற்றைக் கடந்தபின் எழுதப்பட்ட சம்கிதைகளையும் பிராமணங்களையும்பற்றி அவ்வாறு கூறுதல் இயலாது.--சி. ஆர். ஹன்ரர்-- New Review--1936.

  சனகன் யாக்ஞவல்கியரையும் அவருடன் நின்ற பிராமணரையும் நோக்கி, நீங்கள் அக்கினிகோத்திரம் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை. ஆகவே தீயில் பலியிடுதல் (ஓமம்) முதலியன தமிழரின் கிரியை முறையே யென்று கருத இடமுண்டு. இன்று ஆலயங்களில் நடக்கும் கிரியைகளை ஒத்த பழைய தமிழர்களின் கிரியை முறைகளைப் பின்பற்றியே பிராமணங்கள் செய்யப்பட்டிருத்தலும் கூடும். பிராமணங்கள் கி. மு. 800-க்குச் சிறிது முன் செய்யப்பட்டனவென்றும். ஆகவே மிகப்பழைய வேத பாடங்கள் கி. மு. 1200-க்கு முன் தோன்றியிருக்க முடியாதென்றும் பனேஜி என்பார் கூறுவர்.--வரலாற்றுக்கு முற்பட்ட பழைய இந்து இந்தியா. பக்கம். 44.

  2. யாகங்களில் பாடல்கள் பாடுவதும் இவ்வகையினதே.