வாழ்க்கைப்டியில் இருந்தமையின் அவர்கள் தங் கடவுளருக்கு நிலையான கோயில்கள் அமைத்துப் பலியிட்டு வழி படவில்லை. சென்றசென்ற இடங்களில் கடவுளைக்குறித்துப் பலியிட்டனர். இதுவே மற்றைய மக்களின் வேள்விகளுக்கும் ஆரியமக்களின் வேள்விகளுக்கும் வேற்றுமை. பிற்கால மக்கள், வேள்விகள் அல்லது யாகங்கள் எனப் படுவன ஆரியமக்களுக்கு மாத்திரம் உரியன வென்று தடுமாறுவாராயினர். ஆரியர் பெரிய இராச்சியங்களைக் கோலியபின் இவ் வேள்விகள் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்டன. அக்காலங்களில் வேள்விகள் புரியும் கிரியை முறைகள் (பிராமணங்கள்) வரையப்பட்டன. இக்கிரியை முறைகளைப் பயின்று அவற்றில் வல்லுநரானோர் பிராமணர் எனப்பட்டனர். பிற்காலங்களில் இப் பெயர், கோயிற் குருக்கள் புரோகிதரையும் குறிக்க வழங்குவதாயிற்று. இதனால் பிராமணர் என்போர் ஆரியமக்கள் என்னும் எண்ணம் பலர் கருத்தில் பதிந்துள்ளது. இன்று தென்னாட்டிற் காணும் கோயிற் குருக்களும் புரோகிதரும் முற்காலத்தில் எகிப்திய பாபிலோனிய நாடுகளிற் காணப்பட்ட குருமார் போன்றவர்களே. பிராமண காலம் கி. மு. 1400-க்குப் பின் ஆரியர் (கலப்பு ஆரியர்) கிழக்கு நோக்கிச் சென்று அங்குள்ள தமிழர் இராச்சியங்களை வெற்றி கொண்டனர். அக்காலங்களில் அவர்கள் யாகங்களை ஆடம்பரமாகச் செய்ய ஆரம்பித்தனர். அதன் பொருட்டு யாகக்கிரியை இன்றும் பூசனிக்காய்களைவெட்டிக் குங்குமம் நடுவேபூசப் படுகின்றது. பலியிட்ட மிருகங்களைத் தீயில் இட்டுப் பொரித்து உண்பதற்கு பதில், பிற்காலத்தில் உணவு ஓமத்தில் இடப்படுகின்றது. ஓமத்தீயில் உணவை இடுவதற்குப் பதிலாக மேற்கு ஆசிய நாடுகளில் தூபம் காட்டப்பட்டதென வரலாற்று நூலார் கூறுகின்றனர். |