பக்கம் எண் :

30தமிழ் இந்தியா

பி. தி. சீனிவாச ஐயங்கார் மந்திர காலத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு:

  படை எடுத்துவந்த ஒருசிறு கூட்டத்தினரால் பெரிய சாதிமாற்றம் ஏற்பட்டிருக்க இடமில்லை. திராவிட மொழியைப் பேசிய மக்கள் வேண்டியவளவு சீர்திருத்தமுள்ளவர்களாகவும் புதியவர்களை விழுங்கிவிடக்கூடிய தொகையினராகவும் இருந்தனர். இவர்கள் தமது தொழில் வளர்ச்சிகளுக்கேற்பச் செழிப்படைந்து கிடந்த தம் சொற்களை அவர்களுக்கு உதவினார்கள். 1

   சிலாற்றர் என்னும் ஆசிரியர், மொழியளவில் தமிழர்கள் எவ்வளவுக்கு ஆரியர்களானார்களோ, அவ்வளவுக்கு ஆரியர் கொள்கைகளில் தமிழர்களானார்கள் எனக் கூறியுள்ளார். இந்திய மக்களின் அரசியல் வாழ்க்கை வரலாறுகள் ஒரே வகையாகக் காணப்படுகின்றன.
 

வேள்விகள்

  பழைய உலகமக்கள் எல்லோரும் உயிர்ப்பலியிட்டுக் கடவுளரை வழிபட்டனர். 2 ஆரியமக்கள் அலைந்து திரியும் வாழ்க்கைப்படியில்


1. Life in ancient India P. 16, P. T. S. Iyengar.
2. உயிர்ப்பலியிடும் வழக்கம் பிற்காலத்தில் காய் கனிகளையும் பிற உணவுகளையும் படைக்கும் வழக்கமாக மாறிற்று. உயிர்ப்பலிக்குப் பதில் இன்றும் பூசனிக்காய்களைவெட்டிக் குங்குமம் நடுவேபூசப் படுகின்றது. பலியிட்ட மிருகங்களைத் தீயில் இட்டுப் பொரித்து உண்பதற்கு பதில், பிற்காலத்தில் உணவு ஓமத்தில் இடப்படுகின்றது. ஓமத்தீயில் உணவை இடுவதற்குப் பதிலாக மேற்கு ஆசிய நாடுகளில் தூபம் காட்டப்பட்டதென வரலாற்று நூலார் கூறுகின்றனர்.