முதலியன. இவை நூறு கதவுகளுள்ள கோட்டைகளுள் வைத்துக் காக்கப்பட்டன. தாசுக்கள் மைதானங்களிலும் மலைகளிலும் சொத்துக்களை வைத்திருந்த செல்வப் பெருமக்கள். அவர்கள் பொன்னாபரணங்களை அணிந்தார்கள். தாசுக்கள் பொன் வெள்ளி இரும்புக் கோட்டைகளில் வாழ்ந்தனர். இந்திரன் தன்னை வணங்கும் தேவோ தாசர்களின் பொருட்டு நூறு கற்கோட்டைகளிலிருந்து தாசர்களை வெற்றிகொண்டான். தாசுக்கள் ஆரியரின் கடவுளர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மிகச் சீர்திருத்தம் பெற்று விளங்கினார்கள். கிருட்டினன் என்னும் தாசன் தன் பதினாயிரம் வீரர்களுடன் இந்திரனை எதிர்த்தான். தாசுக்களில் பாணியர் என்னும் ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் கடல்வழியாகவும் தரைவழியாகவும் வியாபாரஞ் செய்த தமிழ்நாட்டு வணிகர். கி. மு. 2000-க்கும் கி. மு. 1400-க்கு மிடையில் ஆரிய மக்கள் பஞ்சாப் முழுமையும் கைப்பற்றினர். இநதியாவை அடைந்த ஆரியமக்களை விட அங்கு வாழ்ந்த திராவிட மக்கள் கூடிய தொகையினராயிருந்தனர். ஆரியமக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் விவாகக் கலப்புகள் நேர்ந்தன. வேதபாடல்களைச் செய்த முனிவர்கள் பலர்--வசிட்டர், அகத்தியர், விசுவாமித்திரர் முதலியோர்--தமிழ் மரபினர் என அவர்கள் நிறம்பற்றித் தெரியவருகின்றது. வருணன் என்னும் கடவுளே அசுரன் எனப்படுகின்றான். 1 1. God varuna was himself an Asura. Mr. Benerji believes that the Asuras were different from Dasus but identical with Dravidians. The Dasus he points out were black, while Asuras were brown or rather golden. This synthesis he points out in the adoption of the Cult of Siva which was the Asura Cult; as a part of Vedic System of worship Varuha and other Asura gods were incorporated into the Vedic Pantheon. the gods of the Asuras and the gods of the Irtsus become one. A social amalgamation came into existence with fruitful results. The Asuras and the Devas were made sons of the same Father God. Many Vedic Kings and Rishis came to have Asura Blood in them as is indicated by the colour. Sages like Vasishta, Agastya and Visvamitra were given the same Father Mitra--Varuna. Asura in Aryan means Supreme God.-Pre-musalman India....P.P. 172. 174, 177... V. Rangacharya, M. A. |