தாய்க்கடவுள், சூரியன், பசுபதி, இடபம், மரம் முதலியன வணங்கப்பட்டன. ஆரியர் வருகை தெற்கு இந்தியாவிலே மேற்கில் தான்யூப் நதிக்கும், கிழக்கில் காஸ்பியன் கடலுக்குமிடையே வாழ்ந்த வெண்ணிறமக்கள் ஆரியர் எனப்படுவர். இவர்கள் மந்தை மேய்க்கும் வாழ்க்கைப்படியை அடைந்திருந்தனர். இவர்கள் தம் மந்தைகளுடனும் பெண்டு பிள்ளைகளுடனும் கூடாரங்களைப் பெயர்த்துக்கொண்டு இடமிடமாகத் திரிவர். இவ்வாறு திரியும் மார்க்கத்தில் இவர்களின் ஒரு பிரிவினர் கைபர் கணவாய் வழியாக இந்தியாவை அடைந்தனர். இது கி. மு. 2000 வரையில் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் இந்தியாவின் வடமேற்கு மூலைகளில் தங்கிச் சிறிது சிறிதாக ஏழு நதிகள் பாய்கின்ற பஞ்சாப் தேசம் முழுவதையும் கைப்பற்றினர். ஆரியர் வருங்கால் அங்கு உன்னத நாகரிகத்தினராய் வாழ்ந்துகொண்டிருந்த தமிழ் மக்களைப்பற்றி ஆரியமக்கள் தங் கடவுளரை வழுத்திப் பாடிய பாடல்களில் காணப்படுகின்றது. முற்காலங்களில் சீர்திருத்தமுள்ள சாதியினரை முரட்டுச் சாதியினர் படையெடுத்து வென்றார்கள். இது கிரேக்கரை உரோமர் வென்றதும், ஹன்ஸ் (Huns) என்னும் முரட்டுச் சாதியினர் ஆசியா ஐரோப்பா முதலிய நாடுகளைக் கலங்கச் செய்ததும் போன்ற நிகழ்ச்சிகளினால் நன்கு அறியலாகும். ஆசிய மக்கள் தம்மை எதிர்த்த தமிழரை அசுரர், தைத்தியர், தாசர், நாகர் என வழங்கினர். வேத பாடல்களால் தாசுக்களைப்பற்றி அறியக்கிடப்பன வருமாறு: தாசுக்கள் நகரங்களில் வாழ்ந்தனர். அந்நகரங்களில் அரசர் வாழ்ந்தனர். அவர்களிடத்தில் திரண்ட செல்வம் இருந்தது. அச்செல்வம் பசு தேர் குதிரை |