கிரேத்தா சைபிரஸ் வரையில் ஒரே இனமக்கள் வாழ்ந்தார்கள். அரப்பா, மகஞ்சோதரோ அரப்பா மகஞ்சோதரோ காலம் இந்தியாவின் வெண்கலக் கால நாகரிகத்தை வெளியிடுகின்றது. இந் நகரங்களின் நாகரிகம் கி. மு. 3500 வரையில் என்று கருதப்படுகின்றது. நாகரிகம் வளர்வதற்கு இனி இடம் இல்லை என்னும்படி அக்கால நாகரிகம் உயர்நிலை அடைந்திருந்தது. நகரங்கள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன. மாடியுடைய வீடுகள் கிணறுகளோடு கூடியனவாகவும், நீர் ஓடும் கால்கள் உடையனவாகவும் வீதிகளின் இரு மருங்குகளிலும் கட்டப்பட்டிருந்தன. மக்கள் பயிர்ச்செய்கை வியாபாரம் என்பவைகளால் பொருளீட்டினர். வியாபாரம் மெசபெதேமியா வரையில் நடைபெற்றது. யானை ஒட்டகம் நாய் ஆடு மாடு முதலிய மிருகங்கள் வளர்க்கப்பட்டன. வில்லு அம்புகள் செம்பினாலும் வெண்கலத்தினாலும் செய்த கோடரிகள், ஈட்டிகள், மழிக்குங்கத்திகள், கத்திகள் முதலியன பயன்படுத்தப்பட்டன. பொன் வெள்ளி செம்பு வெண்கலம் யானைத்தந்தம் கண்ணாடி ஓடுகள் முதலியவைகளால் ஆபரணங்கள் செய்யப்பட்டன. பஞ்சினால் ஆடை நெய்யப்பட்டது. மட்பாண்டங்கள் அழகாகவும் நிறங்கொடுத்தும் வனையப்பட்டன. சித்திர எழுத்துப் போன்ற ஒருவகை எழுத்து முத்திரைகளிற் காணப்படுகின்றது. 1. The earliest stone age culture of India is represented by the hand axe technique of Madras, and the old stone age people may have migrated from South India into Central India where in the Narbada Valley, have been found middle pleistocene tools and a fauna gradually extended through the Ganges and Jamuna valleys to North Western India right up to Himalayan Hills-India and the Pacific World P. 279. |