வெண்கலக் காலம் தென்னிந்தியாவில் கற்காலத்தை அடுத்து வெண்கலக் காலமும் இரும்புக் காலமும் இருந்தன. தகரத்தையும், செம்பையுங் கலந்து வெண்கலஞ் செய்யப்பட்டது. தென்னிந்திய சமாதிகளில் அழகிய வெண்கலப் பொருள்கள் காணப்பட்டன. மிக முக்கியமான செம்புப் பொருள்கள் மத்திய இந்தியாவில் கங்கேரியா (Gungeria) என்னுமிடத்திற் காணப்பட்டன. இங்கு 424 செம்பு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி. மு. 2000 வரையில் பயன்படுத்தப்பட்டனவாகலாம் எனக் கருதப்படுகின்றன. அங்கு 102 வெள்ளித் தகடுகளும் காணப்பட்டன. அவைகளில் சில வட்டவடிவாயுள்ளன. சில தகடுகளின் மீது கொம்புள்ள மாட்டுத் தலைகள் வரையப்பட்டிருந்தன. வெள்ளி இந்தியாவில் அதிகம் கிடையாமையால் அது பிற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். செம்பு இந்தியாவிற் கிடைக்கக்கூடியது. இவையல்லாமல், செம்பினாற் செய்யப்பட்ட, உளி, எறிஉளி வாள் ஈட்டித்தலை முதலியனவும் கிடைத்தன. இவை கோன்பூர் வாதெல்கார் (Fatelgarh) மணிபுரி முத்தா என்னுமிடங்களிலும் வட இந்தியா முழுமையிலும் காணப்பட்டன. தெற்கில் வாழ்ந்த மக்களே வடக்கிற் சென்று குடியேறினர் ஆராய்ச்சியாளர், தென்னிந்தியாவில் வாழ்ந்துகொண்டிருந்த பழைய கற்காலமக்களே மத்திய இந்தியா கங்கை யமுனை வெளிகள் வடமேற்கு இந்தியாமுதல் இமயமலை வரையில் சென்று குடியேறினார்கள் எனக் கூறுகின்றனர். கி. மு. 4000 வரையில் இந்தியா முதல் பாரசீகம் எகிப்து |