எலும்போடு குவாட் செட் (quartzite) கல்லாற் செய்யப்பட்ட ஆயுதமொன்று கண்டெடுக்கப்பட்டது. மிர்சாப்பூரில் புதிய கற்கால ஆயுதங்கள் பல கிடைத்தன. கங்கைப் பள்ளத்தாக்கில் குன்சிப்பூர் மாகாணத்தில் மீன் முள்ளாற் செய்த தூண்டிலொன்று ஆறிடு மணல்மேட்டில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. பழைய கற்கால மக்கள் கடப்பா சென்னைக் கரைகளில் மாத்திரம் வாழ்ந்தார்கள். புதிய கற்காலத்தில் அவர்கள் இந்தியா முழுமையிலும் பரந்து வாழ ஆரம்பித்தார்கள். அவர்களுடைய ஆயுதங்கள் சிறிய தீத்தட்டிக் கற்கள். அவை அரை அங்குலம் முதல் ஒன்று அல்லது ஒன்றரை அங்குல நீளம் வரையில் உள்ளன. அம்புத்தலை, வில்லுப்பிறை இவை இரண்டும் கலந்த வடிவமுள்ள கல்லாயுதங்கள் பிடியில் இறுக்கிப் பயன்படுத்தப்பட்டன. இவை அதிகமாக விந்தியமலை பாகெல் கண்ட் (Boghel Kand) றேவா (Rewah,) மிர்சாப்பூர் மலைத் தாழ்வாரங்களிற் காணப்படுகின்றன. மக்கள் வாழ்ந்த ஒதுக்கிடங்களில் அடுப்பு கரி எலும்புகள் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. உளி போன்ற ஒருவகை ஆயுதங்கள் சூடிய நாகபுரி அசாம் பர்மா இந்துசீனம் மலாபா முதலிய இடங்களிற் காணப்பட்டன. பழைய கற்கால ஆயுதங்கள் செய்யப்பட்ட இடங்கள் தென்னிந்தியாவிற் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆயுதங்கள் பாறைகளில் தீட்டிக் கூராக்கப் பட்டன. 10, அல்லது 14 அங்குலம் நீளமுள்ள குடையப்பட்ட பொருள்கள் காணப்பட்டன. இவைகளோடு உயர்தர மட்பாண்ட உடைவுகளும் செங்கற்களும் காணப்பட்டன. இந்தியாவிலே கற்சமாதிகளில் கோப்பை அடையாளங்கள் காணப்படுகின்றன. |