கோலாப்பூர் என்னும் இடத்தில் 54 புதிய கற்காலச் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளுள் மட்பாண்டங்கள் காணப்பட்டன. பல்லாவரத்திற் காணப்பட்ட ஈமத்தாழிகளைப்போலச் செங்கற்பட்டு நெல்லூர் ஆற்காடு முதலிய இடங்களிற் காணப்பட்டன. பலவகைக் கற்சமாதிகள் சென்னை பம்பாய் மைசூர் நிசாம் இராச்சியங்களிற் காணப்பட்டன. இவைகளுள் இரும்பு ஆயுதங்களும் கிடைத்தன. அக்காலத்திற் பிணங்களைச் சுடுதலும் உண்டு. தாழிகளில் சாம்பர் காணப்படவில்லை; உடலை வெட்டிச் சில துண்டுகள் தாழியில் இடப்பட்ட புதிய கற்காலத்தில் ஈமத்தாழிகள் பயன்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் நிலத்தில் 1,000 தாழிகள் கிளறி எடுக்கப்பட்டன. ஆதிச்சநல்லூர் திருநெல்வேலி மாகாணத்தில் தாமிரபரணி ஆற்றோரத்திலுள்ளது. சில உலோகப் பொருள்கள் இல்லாவிடில் அவை புதிய கற்காலத் தனவாகலாம். அவைகளுள் இரும்பாயுதங்களும் வெண்கல ஆபரணங்களும் காணப்பட்டன. பிராமண பார்த்து சிந்து முதலிய இடங்களிலும் தாழிப் புதையல்கள் காணப்படுகின்றன. தக்கணத்திலும் தென்னிந்தியாவிலும் பழையகற்காலப்பொருள்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை பூகோளக்குறுக்கு இரேகைக்கு இருபத்தைந்து பாகையின் கீழ்க்கிடைக்கின்றன. அக்கால மக்கள் ஒரு வகை வெள்ளைக் கல்லால் (quartzite) ஆயுதஞ் செய்தார்கள். இவ்வகை ஆயுதங்கள் குண்டூர் கடப்பா என்னுமிடங்களில் அதிகம் காணப்பட்டன. இன்னும் பல இடங்களிலும் பழைய கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இப்பொழுது அடி அழிந்துபோன காண்டாமிருக |