பக்கம் எண் :

தமிழ் இந்தியா23

பயன்படுத்திய ஆயுதங்களும் மட்பாண்டங்களும் காணப்படுகின்றன.

  நருமதைப் பள்ளத்தாக்கில் அடி அழிந்த விலங்கின் என்புகளோடு கண்டெடுக்கப்பட்ட பழைய கற்கால ஆயுதத்தின் காலம் 400,000 ஆண்டு வரையில் எனக் கருதப்படுகின்றது. 1

   டாக்டர். டி. தெரா
(Dr. De. Terra) என்பவர் இந்திய மக்களின் பழைய கற்காலம் கி. மு. 30,000-க்கும் கி. மு. 20,000-க்கும் இடையில் எனக் கணக்கிட்டுள்ளார். 2

  விந்திய மலையில் பழைய கற்கால மக்கள் தீட்டிய சித்திரங்கள் காணப்படுகின்றன. அங்கு வேடர் ஈட்டிகளால் காண்டாமிருகத்தைத் தாக்கும் சித்திரம் ஒன்று காணப்படுகின்றது. அவ்வகையான காண்டாமிருகம் இப்பொழுது காணப்படவில்லை. காய்மூர்
(Kaimur) மலையில் மானை வேட்டையாடும் சித்திரங்களும், சொஸ்லங்கபாத்தில் ஒட்டைச் சிவிங்கிகளின் சித்திரங்களும், சிங்கன்பூரில் கங்காரு மான் குதிரை முதலிய விலங்குகளின் சித்திரங்களும் காணப்படுகின்றன. இச் சித்திரங்கள் வரையப்பட்ட இடங்களில் புதிய கற்கால ஆயுதங்களும் கிடைத்தன. பழைய காலத்தவர்கள் பிணங்களைக் காட்டில் எறிந்தார்கள்.

  புதிய கற்கால மக்கள் பிணங்களைப் புதைத்தார்கள். புதிய கற்கால மக்கள் என்புகள் மிஸ்ரப்பூரில்
(Mirzapur) மினுக்கமான மட்பாண்டங்களுடன் காணப்பட்டன.


  1. J. C. Brown, quoted in stone age in India. P. T. S. *****

  2. In Bridern,,,,,,,,,,,,tries to fix an approximate date of the early Indian Palvalithie Culture assigning to Java man and the Pakin man 500,000 to 400,000 B. C. He places the Indian early Palacolithie Culture in the second interglacial 200,000 B. C.) and Solo man in Cirea 100,000 B. C. Indian and the Pacific world, P. 280.