கிராம் வுல்லியம் என்பார், இந்திய நாட்டிலே தொல்லுயிர்கள் வளர்ச்சியடைந்து பெருகினவென்றும் மனிதனும் அங்குத் தோன்றித் தத்தளித்து மேல் நோக்கி வந்திருத்தல் கூடும் என்றும் புகல்வர். 1 தமிழ் மக்கள் தமிழ் மக்கள் பிற நாடுகளிலிருந்து வந்து இந்தியாவிற் குடியேறினார்களா, அல்லது, இந்தியாவின் பூர்வகுடிகளா என்பன வரலாற்றாசிரியர்களால் ஆராயப்பட்டுள்ளன. ஆதி மக்களின் கிளையினராய் அக்காலப்போக்குகளிலும் கொள்கையிலும் மாறுபடாதோராய்த் தொன்றுதொட்டு *இந்தியநாட்டில் வாழ்ந்து கொண்டிருப்போரே தமிழ் மக்களென்பது இற்றை ஞான்றை வரலாற்று ஆசிரியர் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. இந்தியாவிற் கற்காலம் உலக மக்கள் பழை கற்காலத்திலிருந்து படிப்படியான முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களென மக்கள் நூலார் கூறுகின்றனர். இந்திய நாட்டில் பழைய கற்காலம் முதல் உலோக காலம் வரையில் மக்கள் கையினாற் செய்து பயன்படுத்திய 1. India was an amazing breeding ground for the evolution of life forms. Man himself may have struggled upwards out of the anthropoid within the limits of India. The world we live in, Vol. 1, 104. Graema Williams. "But was Java therefore the region of the human origin; may this not more probably have occured in India where we know there were postanthropoid apes once existing that seem to have been the common stock from which gorilla chimpanzi and Orang utan were derived". Ibid. P. 134. *சங்க நூல்களில் தமிழ்நாடு நாவலந்தீவு. நாவலந் தண் பொழில் என வழங்கப்பட்டுள்ளது. |