பக்கம் எண் :

தமிழ் இந்தியா21

பெரிய கடல்கோளுக்குப் பின் சிறிய கடல்கோள்கள் பல நிகழ்ந்தனவாகலாம். பஃறுளியாறு குமரிக்கோடு முதலியவைகளைக் கடல்கொண்ட வரலாறுகள் இவ்வகையினவே, மத்திய இரேகையை அடுத்த நாடுகளில் அடிக்கடி எரிமலைக் குழப்பங்கள் நேர்தலும் அதனால் தரை கடலுள் மறைந்தபோதலும் இயல்பு. 1883-ல் * கறக்கற்றோவாவில் நேர்ந்த பெரிய எரிமலைக் குழப்பமே இதற்குச் சான்று.


மக்களின் தொட்டில்


  கீன்
(Keane ) என்னும் ஆசிரியர், மனித குடும்பத்தின் தொட்டில் மலாய ஆசியா (யாவா மனிதன்)வாக விருக்கலாம் என்றும் இங்கிருந்து மக்கள் வடக்கு ஆசியா மேற்கு ஆபிரிக்கா கிழக்கு மேற்கு ஒசேனிய உலகம் என்பவைகளுக்குச் சென்று பரவினார்களென்றும் அக் காலத்தில் தரைத் தொடர்பு இருந்ததென்றும் பிற்காலங்களில் நிலங்கள் கடலுள் மறைந்து சுருங்கி விட்டனவென்றும் கூறுவர். 1

  
கீத் (Keith) என்னும் ஆசிரியர், பத்திலட்சம் ஆண்டுகளின் முன் தோன்றிய யாவா மனிதனினின்றும் வளர்ந்து திருந்தியவர்களே ஆஸ்திரேலிய மக்களென்றும் ***** குறிப்பிட்டுள்ளார்.