பக்கம் எண் :

34தமிழ் இந்தியா

இராமாயணம்

  ஆரியர் கங்கைச் சமவெளிகளை அடைந்தபின்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வரலாறே இராமாயணம். 1 இது கி. மு. ஆறாம் நூற்றாண்டு வரையில் விளங்கிய வான்மீக நாற் செய்யப்பட்டதெனக் கருதப்படுகின்றது. இராமாயணக் கதை 2 சாதகக்கதைகளில் வேறு வகையாகக் கூறப்பட்டுள்ளது. வான் மீகி இராமாயணத்தில் இராமர்இராமேசுவரத்தில் இலிங்கம் வைத்து பூசித்த வரலாறு காணப்படவில்லை. இராமர் கரிய நிறத்தினராகக் கூறப்படுகின்றார். தென்னாட்டு வரலாறென்றினை எடுத்துச்சோடித்து வான் மீகர் இராமாயணமாக எழுதினாரோ என்று சிலர் கருதுகின்றனர். சீதையின் பிதாவாகக் கூறப்படும் சனகன் கி. மு. 1000 வரையில் விளங்கினான். இச் சனகனே யாக்ஞவல்கியருக்கு உண்மை ஞானத்தை உபதேசித்தவன். இவன் அக்காலத்தில் கல்வியிற் சிறந்து விளங்கினான். இந்நூலில் பல காலங்களிற் பாடிய பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வான்மீகி இராமயணத்தில் இராமர் விஷ்ணுவின் அவதாரமாகக் கொள்ளப்பட்டிலர்.


  1. இராசாவலி என்னும் இலங்கைப் புத்த நூல் புத்தர் காலத்துக்கு-1844-ஆண்டுகளின் முன் (கி. மு. 2370) இராமாயண நிகழ்ச்சி நடைபெற்ற தெனக் கூறும்.

  2. சாதகக் கதைகளில் இராவணன் சீதையைக் கவர்ந்ததும் இராம ராவணயுத்தம் நிகழ்ந்ததுமாகிய வரலாறுகள் காணப்படாமையின் இராமரைப்பற்றியும் இராவணனைப்பற்றியும் அந்நாட்களில் தனித்தனி வழங்கிய கதைகளை வால்மீகர் இணைத்து இராமாயணமென்னும் ஒரு புதிய கதையைச் செய்தார் என்று சிலர் கருதுவர். பாணினியும் பதஞ்சலியும் வாசுதேவன் அருச்சுனன் உதிட்டிரன் முதலியோர் பெயர்களைத் தம் நூல்களில் எடுத்தாண்டிருப்பதுபோல இராமருடைய பெயரை எடுத்தாளவில்லை. பிற்காலத்து எழுதப்பட்ட அமர சிம்ஹத்திலும் விஷ்ணுவின் பெயர்களுள் இராமரின் பெயர் கூறப்படவில்லை."
--Early History of the Dekkan R. G. Bhandakar, P. 17.