பக்கம் எண் :

தமிழ் இந்தியா35

உபநிடத காலம்

  ஆரிய மக்களின் வழிபாடு கடவுளுக்கு ஒன்றைக் கொடுத்துத் தமக்குவேண்டிய ஒன்றைப் பெறும் கொள்கையளவில் இருந்தது. அவர்கள் உலகம் உயிர் கடவுள் என்னும் முப்பொருள் உண்மைகளைப்பற்றி அறியாதிருந்தனர்.1 மறுபிறப்பைப்பற்றி அவர்கள் வேதங்களிற் கூறப்படவில்லை. இறந்தபின் உயிர்கள் நேரே கூற்றுவனுலகுக்குச் சென்று அங்கு நெடுக வாழ்ந்திருக்கும் என அவர்கள் நம்பினார்கள்2 ஆரியர் இந்திய நாட்டை அடைவதன் முன்னரே தமிழ் மக்கள் முப்பொருள் உண்மைகளை நன்கு ஆராய்ந்து அறிந்திருந்தார்கள். அவ்வுண்மை ஞானங்களின் வெளியீடாகிய உபநிடதங்களே தமிழர்களது ஞானமாகும். இதனை ஆராய்ச்சியாளர் எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகின்றனர்.

  "உபநிடதங்களில் சிறப்பித்துச் சொல்லப்படும் யாக்ஞ வல்கியர் இந்தியாவின் கிழக்குப்பாகங்களில் வாழ்ந்தவராகலாம். இவர் எழுதியுள்ள நூல்கள் குரு பாஞ்சாலம் கோசலம் விதேகம் என்னும் இடங்களைப்பற்றிக் கூறுகின்றன. யாக்ஞவல்கியர் வாழ்ந்த இடம் அக்காலத்தில் கல்வித் துறையில்


  1. Practically no traces of it (Rebirth) are to be found in the Vedas or in the poems of Homer. The Vedic hero like the Homeric hero goes to dwell in the Elysium of Yama, the protoman, and returns to more to earth.--India and Western World.

H. G. RAWLISON.

  The doctrine of Transmigation is entirely absent from the Vedas and early Brahmanas. It seems probable that the Indian Aryas borrowed the idea from the aboriginies.--Cambridge History of India Vol. I. P. 108 - P. of-Maedonald. No trace of the doctrine of Transmigration is found in the Rig Veda and yet no other doctrine is so peculiarly Indian. It may have bad its origin in non-aryan animism quite early-Origin and development of Bengali, Vol. I. P. 42 S. K. Chatterji.