உயர்ந்து விளங்கிற்று. அறிவுப் பொருளைத் தேடி அங்குப் பலர் வந்தார்கள். யாக்ஞவல்கியர் கல்வி கற்றபின் உண்மை ஞானத்தைத் தேடி இடங்கள்தோறும் அலைந்து திரிந்தார். இவர்களுடன்கூடத் திரிந்தவர்கள் சுவேதகேது அருணேயன் சோமசுஸ்ம சத்தியஞானி என்போர். இவர்கள் கல்வியிற் சிறந்த சனகன் என்னும் விதேகநாட்டு அரசனைக் கண்டார்கள். அவன் வினாவிய கேள்விகளுக்கு யாக்ஞவல்கியர் ஏற்ற விடையளித்தார். சனகன் அவருக்கு நூறு பசுக்களைத் தானம் வழங்கினான். சனகன், தேரில் ஏறிச் செல்வதன்முன் தனக்கும் அவர்களுக்கும் உண்மைஞான அறிவில் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதென்பதை விளக்கினான். இது பிராமணர்களாகிய அவர்களுக்கு அவமானமாக விருந்தது. யாக்ஞவல்கியர் சனகனுடன் சென்று அவனிடம் அரிய ஞானங்களைப் பயின்றார். அவர் காலத்தில் அவரே பெரிய ஞானியாக விளங்கினார். யாக்ஞவல்கி செய்த1 உபநிடதமே ஞான நூல்களுட் சிறந்தது. யாக்ஞவல்கியர் காலத்தில் பிராமணர் சத்திரியரிடத்தில் மாணாக்கராக அமர்ந்து ஞானம் கற்றனர். 1. உபநிடதம் என்பதற்குக் கிட்ட இருப்பது என்பது பொருள். இஞ் ஞானங்கள் குரு சீட பரம்பரை முறையில் எழுதாக் கிளவியாக வந்தன. இவைகளே தமிழர்களது மறை. அவை நூல்களல்ல. இறைவன் கல்லாலின்கீழ் தக்கணாமூர்த்தியாக விருந்து வேதப்பொருளை சனகாதி நால்வருக்கு உபதேசித்தார் எனவரும் ஐதீகமும் இவ்வகையினதே. இவை மறைத்துக் கூறப்படுதலின் மறை, வேதம் என்னும் பெயர் பெற்றன. வேதம் என்பது மூடு என்னும் பொருள் தரும் வே என்னும் அடியாகப் பிறந்தது. ஆரியவேதங்கள் இவ்வாறு மறைத்துக் கூறப்படுவனவல்ல. தமிழர்களின் மறை (இரகசியம்) க்கு வழங்கிய பெயர்களைப் பிற்கால ஆரியர் தம் பாடல்களுக்கு இட்டு வழங்குவாராயினர். எழுதாக் கிளவி, வேதம், மறை முதலிய சொல்லொற்றுமை பற்றிப் பிற்காலத்துப் பெரும் மயக்கம் நேர்ந்தது. The upanishads are philosophical doctrines which were to be kept very secret and to be imparted to students in secrecy - Pre-Historic Ancient India P - 42. R. D. Banerji. |