சனகனைப்போலவே காசி அரசனான அசந்தகேது, யைவாலி அரசன் பிரவாகனன் முதலியோர் விளங்கினார்கள்.1 யாக்ஞவல்கியர் காலம் கி.மு. 1000 வரையில் எனப்படுகின்றது. கி. மு. 1000 வரையில் விந்தமலைக்கு வடக்கே தமிழ்மொழி வேறு மொழிகளாகத் திரிந்து வழங்கிற்று.2 ஆகவே, அக்காலம் தமிழ் உலகத்தின் வடக்கெல்லை விந்திய மலையாயிருந்தது. விந்திய மலைக்கு வடக்கு ஆரியவர்த்த மெனப்பட்டது. பேச்சு வேறுபடுவதன் காரணம் வீட்டிற் பேசுவதுபோல நாம் சபைகளிற் பேசுவதில்லை. இவ்வகையான பேச்சுகளும் ஒரு கூட்டத்தினரின் பேச்சை உண்டாக்கும் (மாக்ஸ்மூலர்). வேற்றுமொழிச் சொற்கள் வந்து ஒரு மொழியுடன் கலப்பதாலும் இரு வேறுமொழிக் குரியவர்களுக்கிடையில் விவாகக் கலப்பு உண்டாகிச் சந்ததி பெருகுவதாலும் மொழிகள் மாறுபடும். மொழிகளை இலக்கண அமைப்புக்கொண்டு அறியலாம். மொழிகள் மாறிவிடினும் இலக்கணம் இலகுவில் மாறுபடாது. இலக்கணம் ஆற்றின் இருமருங்குமுள்ள அணையும், சொற்கள் அவைகளினிடையே ஓடும் நீரும் 1. Man and thought in ancient India Raddakumud-Mookerji pp. 6, 7, 24. 2. And this will confirm the conclusion that the Dravidian tongue prevailed in North India before the Aryans came and occupied it. The same conclusion is forced upon us by an examination of the vernaculars of North India........that even the vernacular; Bengalee which bristles with sanskrit and derivative words, is indebted to Dravidian languages for pretty large portion of the vocobulary and structural peculiarities. What is strange in even in Hindi Speech Dravidian words can be traced. No reasonable doubt can therefore be entertained as to the Dravidian speech once being spoken in North India. Lecture on the Ancient History of India - D. R. Bhandarkar. |