போன்றன. தமிழின் வழிமொழிகள் தமிழைச் சேர்ந்தன என்று காட்டுவதற்கு அம்மொழிகளில் வழங்கும் சொற்களைவிட இலக்கணம் உதவிபுரிகின்றது. ஒரு மொழியைத் தாங்கி நிற்பது இலக்கணம். இப்பொழுது வழங்கும் வட இந்திய மொழிகள் அமைப்பில் தமிழை ஒத்துள்ளன என்று மொழியாராய்ச்சியாளர் நுவல்கின்றனர். ஆகவே அக்காலத்தில் வடமொழி இக்காலம் எவ்வாறு வழக்கிலிருக்கின்றதோ அவ்வாறு இலக்கியமொழியாக வழக்கிலிருந்திருத்தல் வேண்டும்; பேச்சுமொழி வேறாக இருந்திருக்க வேண்டுமென யூகிக்க வேண்டியிருக்கின்றது. பிராகிருதம் தமிழ் மயமாக்கப்பட்டது ஆரியர் இந்தியாவை அடைந்த காலத்தில் அவர்கள் வழங்கிய மொழி பிராகிருதம் எனப்படும். பிராகிருதத்துக்கு இலக்கண வரம்பு இல்லை. இம்மொழியிலேயே வேத பாடல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. "வேதபாடல் செய்யப்படுகின்ற காலத்தில் அங்கு எல்லோராலும் வழங்கப்பட்ட ஒரு வீறுடைய மொழி இருந்திருத்தல் வேண்டும். அம் மொழி பிராகிருதத்தினின்றும் உச்சரிப்புமுறையில் வேறுபட்டது. வேதபாடல்களில் பிராகிருத உச்சரிப்பினின்றும் வேறுபட்ட பல சொற்கள் ஆளப்பட்டிருக்கின்றன. இச்சொற்கள் மற்ற மொழியினின்றும் கடன் வாங்கப்பட்டன என்பதைவிட வேறு வகையாகக் கூறமுடியாது".1 "மந்திர காலத்தில் மூன்று இனமொழிகள் இந்தியாவில் வழங்கின. இவற்றுள் வேதமொழியாகிய இந்து செர்மனிய மொழி ஒன்று. இரண்டாவது, வேத மொழியோடு அமைப்பில் மாறுபட்ட திராவிட மொழி. இது, முன்னதின் 1. A short history of Sanskrit Literature. P. 24 - A. Macdonell. |