அமைப்பு, சொற்கள் என்பவற்றைப் பெரிதும் வேறுபடுத்திற்று. ஆரியமொழி, இந்தியாவில் வளர்ச்சியடைந்தபோது திராவிட மொழியின் வலிமையால் பல மாறுதல்களடைந்து திராவிட முறைகளைத் தழுவிற்று." "திராவிட மக்கள் பொருள்களுக்கும் கலைகளுக்கும் இட்டு வழங்கிய பெயர்கள் எல்லாம் தமிழ். அவை பிற மொழிச்சொற்களல்ல. இக் கருத்து இன்னும் நன்கு ஆராயப்படவில்லை. ஆராய்ச்சியில் சமக்கிருதமொழியிற் காணப்படும் கலைச்சொற்கள் தமிழினின்றும் இரவல் வாங்கப்பட்டன என்று புலப்படுதல் கூடும். இந்து செர்மனிய மொழயாகிய பிராகிருதம் இந்தியாவில் வழங்க ஆரம்பித்த போது அதன் அ. எ. ஒ. என்னும் எழுத்துக்கள் எல்லாம் அ போலாயின; அதன் இலக்கணங்களும் சிறிது சிறிதாகத் தணிவுபட்டன."1 மந்திரகாலத்தில் ஆரியர் விந்தியத்துக்குத் தெற்கே குடியேறவில்லை மந்திரகால நூல்கள் அக்காலத்தில் விளங்கிய நாற்பது கூட்டத்தினரைப் பற்றி மாத்திரம் கூறுகின்றன. அவை விந்தியமலைக்குத் தெற்கே 1. The Dravidian dialects affected profoundly by sounds the structure, the idiom and the vocobulary of the former in the course of its growth in India on account of the constant influence of the Dravidian tongue. This language lost the subjunctive mood, many infinitive forms and several noun declentions, forgot its richly varied system of real verb tenses and adopted terms of expressions peculiar to the Dravidian idiom. The Dravidian names of things and operations connected with these arts of peace are native and not foreign (i.e. borrowed from Sanskrit) the question has not yet been investigated but on enquiry it will most probably turn out that many Sanskrit words connected with these were borrowed from the Dravidian. - The age of the mantras - P. T. S. Ayengar. |