உள்ளவர்களைப்பற்றிக் கூறவில்லை. அக்காலத்தில் தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் போக்குவரத்திருந்தமை மந்திரங்களில் முத்தைப்பற்றிக் கூறப்படுதலால் அறியலாம்.1 புத்தர் காலம் (கி. மு. 557--477) உபநிடத ஞானம் வளர்ச்சியுற்ற காலத்தில் புத்தர் தோன்றினார். இவர் திராவிட மரபினர்.2 இவரது ஞானமும் உபநிடத ஞானங்களை அடிப்படையாகக் கொண்டது. இவர் வேதமதத்துக்கு மாறான புரட்சியைக் கொண்டு வந்தார். இவர் தம் உபதேசங்களை மகத மொழியிற் 3 (பாளி) செய்தார். ஆகவே, புத்தர் காலத்தில் பாளிமொழிமக்களின் பேச்சுமொழியாக இருந்திருத்தல் வேண்டும். பாளி புத்தர் காலத்துக்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளின் முன் தோன்றியிருத்தல் கூடும். புத்தமதம் கலிங்க நாட்டில் மிகவும் வேகமாகப் பரவிற்று. ஆகவே, அங்குப் பாளி மொழி அதிகம் பயிலப்பட்டது. அதனால் அங்கு வழங்கிய தமிழ் சிதைந்து வடுகு அல்லது தெலுங்கு ஆயிற்று. இலங்கைப் புத்தமக்கள் கலிங்கதேசக் கலைகளைப் பின் பற்றினர். அங்கு வழங்கிய தமிழும் பாளி மொழிக் கலப்பினால் சிங்களமாக 1. மந்திர காலம். பி. தி. சீ. ஐயங்கார். 2. புத்தர் கபிலர் வழியிற்றோன்றிய நாககுலத்தவரென்று ஓல்ட்காம் என்னும் ஆசிரியர் ஆராய்ந்து கூறியுள்ளார்.--சூரியனும் சர்ப்பமும்==பக், 66. 3, பாளி மொழியில் ஆரியத்துக்கில்லாத எகர ஒகரம் (குறில்கள்) இருப்பதாலும், மொழி தொடர்பான பிற ஏதுக்களாலும் மகத நாட்டில் தமிழ்மொழி வழங்கியதென்றும் புத்தர் திராவிட வகுப்பைச் சேர்ந்தவரென்றும் பந்தாக்கர் கூறியுள்ளார்- -Wilsons Philological lectures--Dr. R. G. Bhandarkar. Collected works Vol. IV. P. 295. |