பக்கம் எண் :

தமிழ் இந்தியா41

 

மாறிற்று.1 மக்கள் எம் மொழியைச் சமய மொழியாகக் கொள்ளுகிறார்களோ, அம் மொழிச் சொற்கள் அவர்களின் மொழியிற் கலந்து மொழியை வேறுபடுத்தி விடுகின்றது. பெருந்தேவனார் பாரதத்திற் காணப்படும் மணிப்பிரவாள நடையும் இதற்கு உதாரணமாகும். தமிழ் மக்கள் தமிழ் உணர்ச்சியினால் ஆரியத்தை எதிர்த்துப் போராடிவந்தமையின், தமிழ் வேறுமொழியாகச் சிதைந்துவிடாமல் பிழைத்தது. ஆயினும், அதன் ஓரங்கள் கன்னடம் தெலுங்கு துளு மலையாளம் என மாறுபட்டன. இன்றைய தமிழ் மொழியில் வடமொழிக் கறை அதிகம் ஏறியிருத்தலை நாம் அறியலாம். புத்தர் காலத்திற்குப் பின் கலிங்க நாடு வடுகு நாடாக மாறியிருத்தல்வேண்டும். இது கி. மு. நாலாம் நூற்றாண்டு வரையில் என உத்தேசமாகக் கூறலாம். தொல்காப்பியம் செய்யப்படுகின்ற காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கெல்லை வடவேங்கடம் எனப்படுகின்றது. இது, "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்" எனப்படுகின்றமையாலும் அப்பன்னிரு நாடுகளும் சேர சோழ பாண்டிய நாடுகளுக்குட்பட விருந்தமையாலும் அறியப்படும். ஆகவே தொல்காப்பியம் கி. மு. நாலாம் நூற்றாண்டுக்குச் சிறிது முன் பின் செய்யப்பட்டிருத்தல் கூடும். "மலை தேய்ந்து மண்ணாங்கட்டியானது" என்பது நாட்டுப் பழமொழி. அதை


  1. Singhalese is essentially a Dravidian language. Its evolution too seems to have been on a Tamil basis and so we seem safe in saying that, while in regard to its word development. Singhalese is the child of Pali and Sanskrit; it is with regard to its physical features and structure essentially the Daughter of Tamil........with regard to the laws governing the relation of words in sentences Viz: the laws of syntax, including idions we find great many laws which cannot be explained except in the principle of Tamil Grammer-Mudaliar W. E. Gundavardhana.