பக்கம் எண் :

தமிழ் இந்தியா63

பாகன் எனப்பட்டான். தேரில் பலவகை உருவங்கள் வெட்டப்பட்டிருந்தன. அது பலவகை நிறம்பூசிய தடிகளாலும் சீலைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அதன்மீது துகிற் கொடிகள் அசைந்தன.

  வீரர் பலவகை ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுட்பல கற்காலந்தொட்டு மாறுபடாமல் வந்தன. அவை எறுழ், தண்டு, வில், கொக்கரை, சிலை, தடி, தவர், குணில், முனி முதலியன. நூற்றுக்கணக்கான ஆயுதங்களைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்கள் காணப்படுகின்றன.1 அவை கைவிடும்படை கைவிடாப்படை என இருவகையின. வில் நாணியில் அம்பு வைத்தெய்யுமிடம் உடுவெனப்பட்டது. தற்காப்புக்குரிய ஆயுதம் கேடகம்; அது கிடுகு கடகம் தட்டு பரிசை பலகை பறை வட்டணை பட்டம் தொல் தோற்பாரம் எனப் பலவகையினது. மெய் காக்கும் சட்டை மேலகம் அரணி ஆசு எனவும், கைக்கவசம் கைப்புடை எனவும் கூறப்பட்டன.
 

இசைக் கருவிகள்


போரிலே யானை குதிரை காலாள் முதலிய படைகளை ஊக்கமூட்டும் பொருட்டுப் பலவகை வாத்தியங்கள் ஒலிக்கப்பட்டன. இயம் வாத்தியம் வாச்சியம் என்பன இசைக்கருவிகளைக் குறிக்க வழங்கும் பொதுப்பெயர்கள். அவை தோற்கருவி துணைக்கருவி நரம்புக்கருவி மிடற்றுக் கருவி என
 


1. வாள்: உவணி, ஏதி, கடுத்தலை; துவட்டி, நவிர், நாட்டம், வஞ்சம், வாள்; குறுவாள்: குறும்பிடி, சுரிகை, கத்தி; வளைந்த வாள்: கோணம், ஈட்டி, இட்டி, கழுக்கடை; வேல்வகை: எயில், அரணம், எஃகம், எஃகு, குந்தம், ஞாங்கர், உடம்பிடி, விட்டேறு; சூலப்படை: கழு, காழ்; கண்டகோடரிவகை: மழு, கணிச்சி, குத்தாலி, குளிர், தண்ணம்; அம்பு வகை: அம்பு, கணை, கதிரம், கதிர், கோ, கோல், தொடை, தோணி, பகழ், பள்ளம், புடை, வண்டு, வாளி; நாண் வகை: நாணி, பூரம், ஆவல், கொடை, நாரி, நரம்பு, பூட்டு.


 
1. 2. தென்னிந்திய கடவுளர்கையிலிருக்கும்
வீணை
3. உருத்திர வீணை


4 சாஞ்சி அமராவதிச் சிற்பங்களிற் காணப்படுவது


  இப் படங்கள் வீணை எவ்வாறு வளர்ச்சி யடைந்துள்ளதென்பதைக் காட்டுவன. வயலின் (Violin) என்னும் வீணை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளதென்பதை அமராவதிச் சிற்பத்திலுள்ள வீணையின் வடிவைக்கொண்டு நன்கு உய்த்தறியலாகும். பழந்தமிழரின் குடியேற்ற நாடாகிய கிரேத்தாவில் (Crete) வயலினைப் போன்று வில்லின் உதவியால் ஒலிக்கப்படும் வீணைகள் இருந்தன. அவ் வீணைகளின் வடிவும் இன்றைய வயலினின் வடிவுபோன்றதே. Palace of Minos என்னும் நூலில் பழைய கிரேத்தா மக்களுடைய வீணையின் படம் காணப்படுகின்றது. "விண்" என ஒலிக்கும் நரம்பின் ஓசை பற்றி வீணை என்னும் பெயர் உண்டாயிருக்கலாம்.


புத்தர் காலத்திற்கு முற்பட்ட யாழ்
(வட இந்தியாவில் வழங்கியது; சாதகக் கதைகளில்
கூறப்படுவது இவ்வகை யாழே)


எகிப்தில் வழங்கிய யாழ்
(எண்சைகிளோபீடியா பிரித்தானிக்காவிற் கண்டது)


  நரம்பை வில் நாண் போன்று வளைந்த தடியில் பூட்டி ஒலிக்கும் முறையிலிருந்து யாழ் உண்டாயிற்று. பழைய சுமேரியா, அயர்லாந்து, கிரீஸ், உரோம், எகிப்து, தமிழகம் முதலிய நாடுகளில் வழங்கிய யாழ்களை ஒப்பிட்டு நோக்குமிடத்து ஒரே அடிப்படைக் கருத்தினின்றே யாழ் செய்யும் முறை எழுந்ததென்று நன்கு விளங்கும். இசை நூல் வல்ல எம். ஆபிரகாம் பண்டிதரவர்கள், இசையும் இசைக்கருவிகளும் தமிழகத்தினின்றே மேற்குத் தேசங்களுக்குச் சென்றனவென்று ஆராய்ந்து விளக்கியுள்ளார்.