பக்கம் எண் :

8தமிழ் இந்தியா

கண்டமாய் இந்திரத்தீவும், கசேருத்தீவும், தாமிரபர்ணித் தீவும், கபதித்தீவும், நாகத்தீவும், சாந்திரமத்தீவும், காந்தருவத்தீவும், வாருணத்தீவும், குமரித்தீவு மெனப் பெயர் பெற்றுப் பல மலைகளும் பல நதிகளும் பல்வேறு வகைப்பட்ட சாதிகளுமுடைத்தாய் வயங்கும். இவ் வொன்பதுள்ளும் குமரிக்கண்ட மொன்றே வேதாகமவழக்கும், சாதிவரம்பும், கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களும், காசி முதலிய புண்ணிய தலங்களுமுடைத்தாய்ச் சிறந்தது. ஏனை எட்டுக் கண்டங்களும் மிலேச்சர் வாழிடங்களாம்.

  "பூமியின் மேற்பரப்பு ஏழுகடலும் ஏழு பெருந்தீவும் நடுவே மேருவரையு முடைத்தாய்ப் பூலோகமெனப் பெயர் பெறும். இந் நாவலந்தீவினடுவே மேருவரை நூறாயிரம் யோசனை அளவுடைத்தாய் வயங்கும்.,,,,,," இது மிருகேந்திரத்திற் கண்டது.


மேரு உலகுக்கு நடு

  புராணங்களும் இதிகாசங்களும் பழைய கடல் நிலங்களைப் பற்றிப் பிறழக் கூறுமாயினும் மேரு உலகுக்கு மத்தியில் உள்ளது என்பதை எல்லாம் ஒரு தலையாக ஏற்றுக்கொள்ளும். புத்தசைன நூல்கள் மேருவை மந்தரம் எனக்கூறும். பாகவத புராணமும் கந்தபுராணமும் ஒரு காலத்தில் காற்றுக் கடவுளுக்கும் மேருமலைக்கும் நேர்ந்தபோரில் காற்றுக் கடவுளால் முறித்துக் கடலுள் விசப்பட்ட மேருவின் திகரமொன்றே இலங்கை எனக் கூறுகின்றன. இது வெப்ப நாடுகளில் அடிக்கடி நேரும் காற்றுக்குழப்பம் ஒன்றையும் அக்காலத்தில் மேருவின் ஒருபகுதி கடலுள் மறைந்த வரலாற்றினையும் குறிக்குமெனக் கருதப்படுகின்றது. ஆகவே இம்மலை பூமத்திய இரேகையை அடுத்து உலகுக்கு மத்தியில் இருந்ததெனத் தெரிகின்றது. பிற்காலத்தில் இம்மலை