பக்கம் எண் :

தமிழ் இந்தியா7

தாவர உயிர் நூலார் கொந்வானா என்னும் கண்டத்தை லெமூரியா என வழங்குவர்.
 

பழைய பூமி சாத்திரம்


  இந்திய மக்களின் பழங்கதைகளைக் கூறும் புராணங்களும் இதிகாசங்களும் பூமியின் நடுவே பெரிய பூகண்ட மொன்று இருந்ததைக் கூறுகின்றன. மிருகேந்திர ஆகமத்திற் கூறப்படுவதாக மாதவச் சிவஞான யோகிகள் சிவஞானபோத மாபாடியத்திற் காட்டியுள்ள பகுதிகள் சில அப்பெரிய பூகண்டத்தைப்பற்றி ஒரளவு விளக்குவனவாகும். அவை வருமாறு: ஏழு பெருந் தீவின் நடுத்தீவாவது நூறாயிரம் யோசனைப் பரப்புடைத்தாய் வட்டமாய் நிலமகட்கு உத்தித் தானமாயுள்ள நாவலந் தீவு...................இந் நாவலந்தீவின் நடுவே மேருவரை..................மேருவரையைச் சூழ்ந்த நிலமாகிய இளாவிருதம்.....................இமயத்திற்கும் தென் கண்டத்திற்கும் நடுக்கண்டமாகிய பாரதவருடத்தில் வாழ்வோர்.........இவற்றுட் 1 பாரதவருடமும் ஒன்பது


  1. பாரத வருடமென்பது பழைய பபிலோணியா அசீரியாவென்றும், கங்கையின் உற்பத்தியைக் கூறும் வரலாறு தைகிரஸ் பூபிரதஸ் ஆறுகளின் உற்பத்தி வரலாறென்றும் வி. வேங்கடாசலம் ஐயரென்பவர் "பாரதவருடம்" என்னும் நூலில் ஆராய்ந்து காட்டியுள்ளார்.


  The Original Bharatavarsha was the land of the Enphrates. This is what Sir Hentry C. Rawlinsen says.........Bharatavarsha therefore originally meant the land through which the Enphrates flowed............so then the earliest monarchs of Bharatavarsha were not..........Bharata of Manus generations but bearedd semites of Babylon an Assur Calah or Ninervah - Bharatavarsha P. 28. - V. Venkatachalam Iyer.


  வடல்
(Waddell) என்னும் ஆசிரியர் அக்கேடிய சார்கன் என்பவனே இந்திய சகரன் எனக் கூறுவர்.