பக்கம் எண் :

தமிழ் இந்தியா9

இமயமலையை அடுத்தோ அதற்கு வடக்கிலோ இருந்ததெனக் கருதப்பட்டது. கி. மு. 4-ம் நூற்றாண்டில் விளங்கிய மெகஸ்தீனஸ் என்னும் கிரேக்கர் மேருமலை பாண்டி நாட்டில் உள்ளதெனக் கூறியுள்ளார ். 1

  பாஸ்கராச்சாரியர் எழுதிய வானநூற் குறிப்பில் பூமத்திய இரேகை பழைய இலங்கைக்கு ஊடாகச் சென்றதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமத்திய இரேகை சுமத்திராவுக்கு ஊடாகச் செல்கின்றது. இலங்கைப் புத்த நூல்கள் இப்பொழுதுள்ள இலங்கை, முன்னைய இலங்கையில் பன்னிரண்டில் ஒரு பகுதி எனக் கூறுகின்றன. இப்பொழுது இலங்கைக்கு 400 கல் தூரத்திலுள்ள மாலைத் தீவு எனப் படும் தீவுக்கூட்டங்கள் இலங்கையின் பகுதியாக இருந்தன என்று நில நூலார் கூறுவர். அத்தீவுகளில் வாழும் மக்கள்


1. The Pandaeon nation is said to have been governed by females and their first queen is said to have been the daughter of Hercules. The City nysa is assigned to this reign as is also the mountain sacred to Jupiter. meros by name. In a cave on which the ancient Indians affirm Father Baccus was nourlshed-Ancient India as described by Megasthenes and Arrian - P. 156.

"இடைபிங் கலையிம வானோ டிலங்கை
 நடுகின்ற மேரு நடுவாஞ் சுழுனை"
"மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
 கூரு மிமவா னிலங்கைக் குறியுறுஞ்
 காருந் நிலைவனத் தண்மா மலையத்தூ
 டேறுஞ் சுழுனை யிவைசிவ பூமியே"

என்னும் திருமந்திர அடிகளும் ஆராயத்தக்கன.

  The Greek writers identified the gods of the country with their own. They supposed Siva to be Bacchus and believed Krishna to be Herackles-The Muhammadans-P. 13 J. D. Rees. C.I.E., I.C.S.