பக்கம் எண் :

1

 
தென்னாடு
 
     உலகின் பழம்பெரு நாடுகளில் தென்னாடு ஒன்று. அதுவே மனித இனத்தின்
பிறப்பிடம் என்று மண்ணூலார் சாற்றுகின்றனர். வரலாறு தரும் சான்றுகள்
இந்நாட்டுக்குத் தனிப்பெருஞ் சிறப்புக்களை வழங்குகின்றன. பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளாக, இந்நாடே மனித நாகரிகத்தின் தொட்டிலாகவும், வளர்ப்புப்
பண்ணையாகவும் இருந்திருக்கிறது.
 
     தென்னாட்டின் முழு வரலாறு இது வரையில் தொடர்ச்சியாக எழுதப்படவில்லை.
அதன் தொடக்க காலம் இன்னும் வரலாற்றுக்கு எட்டாததாகவே இருக்கிறது. எனினும்,
இக்காலப் புதை பொருள் ஆராய்ச்சிகளால், அதன் பழம் பெருமைகள் அறிவுலகுக்குப்
படிப்படியாக விளக்கமடைந்து வருகின்றன.
 
     இன்றைய நாகரிக நாடுகளின் வரலாறுகளெல்லாம் சென்ற இரண்டாயிர
ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. ஆனால் இந்நாடுகளின் வரலாறு தோன்றுவதற்கு
முன்பே, கிரேக்க உரோம நாகரிகங்கள் தலைசிறந்து விளங்கின. இவற்றின் காலம்
*கி.மு.
 

*கி.பி. என்பது கிறித்துவுக்குப் பின். கி.மு. என்பது கிறித்து பிறப்பதற்கு முன். எனவே, கி.மு. 1000 என்பது இன்றையிலிருந்து ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும்.