பக்கம் எண் :

121
 
அணிமைக்காலம்

(14-18 நூற்றாண்டுகள்)

     சோழப் பேரரசு அரசியல் ஒற்றுமை மூலம் தென்னாட்டின் இயற்கையான
பண்பாட்டொற்றுமையை வளர்த்தது. ஆனால் இவ்வொற்றுமை தென்னாட்டின்
அகத்திருந்து எழுந்தஅகஆற்றல். மாலிக்காபூரின் விரைந்த எழுச்சி இதே செயலைப் புற
ஆற்றலாகச் செய்து முடித்தது. அரசியலில் பேரரசுகள் சரிந்து தளர்ந்த காலத்தில் அது
தேவகிரி முதல் இராமேசுவரம்வரை மின்னல் போலப் பாய்ந்து, எல்லா
அரசுகளிடையேயும் மக்களிடையேயும் மின் ஆற்றலைப் பாய்ச்சிற்று. புதிய பேரரசுகள்
ஏற்படுவதற்கு இது பெருந்தூண்டுதலாய் இருந்தது.
 
பகமனி விசயநகரப் பேரரசுகள்
 
     14-ம் நூற்றாண்டுவரை தென்னாட்டுப் பேரரசுகளில் ஆந்திரப் பேரரசு நீங்கலாகப்
பெரும்பாலன தமிழகத்திலிருந்தே தோன்றின. ஆனால் 14-ம் நூற்றாண்டுக்குப் பின்
பேரரசுகள் தென்னாட்டின் நடுமண்டலத்திலும் வட மண்டலத்திலுமே எழுந்தன.
அவற்றுள் முதல் பேரரசுகளும் முதன்மையான பேரரசுகளும் பகமனி விசயநகரப்
பேரரசுகளே. பகமனிப் பேரரசு தென்னாட்டின் முதல் இஸ்லாமியப் பேரரசு. அது
தென்னாட்டுக் கலைப்பண்பையும் பாரசீகக் கலைப்பண்பையும் இணைத்துத்
தென்னாட்டுக்குச் சிறப்பான ஓர் இஸ்லாமிய நாகரித்தையும், உருது மொழி
இலக்கியத்தையும் உருவாக்கி அகல் உலகிற்கு அளித்தது. விசயநகரப் பேரரசு
அதற்கெதிராகத் தென்னாட்டுக்குச்