தலைவன் தெற்கு நோக்கி இராமேசுவரம் வரை படையெடுத்துச் சூறையாடினான். அப்படையெடுப்பால் வடகோடியிலிருந்து தென்கோடி வரை எல்லா அரசுகளும் நிலை கவிழ்ந்தன. தேவகிரியை ஆண்ட யாதவர், மைசூரை ஆண்ட ஹொய்சளர், தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய அரசர் ஆகிய அனைவரிடையேயும் கலவரமும் குழப்பமும் ஏற்பட்டன. பாண்டியப் பேரரசு ஒரு தனிமனிதன் வீரத்தை நம்பி இருந்தது. சோழப் பேரரசைப் போல் ஆட்சி முறையும் மரபும் வகுத்தமைக்க வீரமிக்க அப்பேரரசர் தவறியிருந்தனர். தென்னாட்டில் பேரரசு மீண்டும் ஏற்படும் வரை அரசியல் குழப்பமடைந்தே இருந்தது. | இலக்கிய வளர்ச்சி | சோழப் பேரரசர் ஆட்சி தமிழ் இலக்கியத்திலும் பேரரசு ஆட்சி யாகவே இருந்தது. சுந்தரசோழன் காலத்துக்கும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்துக்கும் இடையே கவிப்பேரரசர் என்ற பெயருடன் கலிங்கத்துப் பரணியால் புவிப்பேரரசரைப் பாடிய சயங்கொண்டார், கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகிய புலவர்களும்; வெண்பாப் புவியாகிய புகழேந்தியும், பெரியபுராணம் பாடிய சேக்கிழாரும் வாழ்ந்தனர். பாண்டியப் பேரரசு விழுந்தபின் திருநெல்வேலியின் சிற்றூராண்ட அரசருள் வரதுங்க பாண்டியன், வரகுண பாண்டியன் ஆகியவர்களும் கவிஞராயிருந்தனர். கங்க அரசருள் சிலர் புத்த சமணச் சார்பான நன்னூல், நேமிநாதம் போன்ற நூல்களுக்கு ஆதரவளித்தனர். | தமிழில் உரையாசிரியர் பலர் ஏற்பட்டதும், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவற்றில் பெருங்காவியங்கள் எழுதப் பட்டதும் இக்காலத்திலேயே. தெலுங்கு பாரதம் எழுதிய திக்கணன் தெலுங்கு சோடரையும், கன்னடக் கவிஞன் பில்ஹணன் ஆறாம் விக்கிரமாதித்தனையும் பாடினர். | | |
|
|