பக்கம் எண் :

119
 
     சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்களுள் ஒன்று சைவசித்தாந்த நெறி காப்பதற்காகத்
தஞ்சையில் ஒரு சைவ மடம் ஏற்படுத்தியதைக் குறிக்கிறது. 'மார்க்கோ போலோ,' என்ற
வெனிஸ் நகர யாத்திரிகனும் 'வஸ்ஸஃவ்,' என்ற முசல்மான் வரலாற்று எழுத்தாளனும்
குலசேகரனைப் பற்றியும் சுந்தரபாண்டியனைப் பற்றியும் விரிவாக நமக்கு எழுதியுள்ளார்.
 
     அந்நாளைய உலகின் பெரும்பகுதி செல்வமும் வாணிக மூலமும் வெற்றிகள்
மூலமும் முத்துக்குளிப்பு, சங்குத் தொழில்கள் மூலமும் தமிழகத்திலேயே வந்து
குவிந்திருந்தன. தென்னாடு, சிறப்பாகப் பாண்டிய அரசு அந்நாளில் செல்வத்திலும்
ஆற்றலிலும் முதன்மைபெற்றிருந்ததனால், அது பெரிய இந்தியா என்றும், இமயம்
வரையுள்ள வட இந்தியா சிறிய இந்தியா என்றும் அழைக்கப்பட்டன. பாண்டிய அரசன்
செல்வத்தின் பெரும்பகுதி அராபி நாட்டிலிருந்து வரும் குதிரைகளை வாங்குவதிலேயே
செலவிடப்பட்டது. ஆண்டுதோறும் நூறாயிரம் குதிரைகளுக்கும் குறையாமல் பாண்டியர்
படைக்கு வாங்கப்பட்டன. மன்னன் அணிந்த ஆடையணிமணிகளும் பேரரசின்
செல்வத்தில் பாதி பெறுவதாயிருந்தது. இவையே மார்க்கோபோலோ, வஸ்ஸஃவ்
ஆகியோர் அந்நாளைய பாண்டியநாடு பற்றித் தரும் தகவல்களில் முக்கியமானவை.
 
     14-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியரிடையே மீட்டும் அரசுரிமைப் போர்
மூண்டதாக அறிகிறோம். இதனிடையே திருவாங்கூரில் ஆண்ட இரவிவர்ம குலசேகரன்
என்ற சிற்றரசன் திடுமென எழுந்து சேர சோழ பாண்டியர் மூவரையும் வென்று,
கொல்லம், சீர்காழி, காஞ்சிபுரம் ஆகிய மூன்றிடங்களிலும் தென்னாட்டுப் பேரரசனாகத்
தன்னை முடிசூட்டிக் கொண்டான்.
 
     1310-ல் சிந்து கங்கைவெளியை ஆண்டு கில்ஜிமரபினரான பேரரசன்
அலாவுதீனிடமிருந்து மாலிக்காபூர் என்ற படைத்