பக்கம் எண் :

124
 
      கடைசி பீஜப்பூர் அரசன் சிகந்தர் (1672-1686) காலத்தின் இறுதியில் பீஜப்பூர்
தில்லியின் அந்நாளைப் பேரரசன் அவுரங்கசீப்பினால் கைக்கொள்ளப்பட்டது.
 
     கோல்கொண்டா அரசர் குத்ப்ஷாக்கள் என்று அழைக்கப்பட்டனர். முதல் அரசன்
குலீப், பகமனியின் கீழ் தெலுங் காணத்தை ஆண்டவன். 1512 அல்லது 1518-ல் அவன்
கோல்கொண்டாவைத் தலைநகராகக் கொண்டு தனி அரசு நிறுவினான். இப்ரஹீம்
அரசன் காலத்தில் (1550-1581) வேங்கிநாடு என்று முன்பு அழைக்கப்பட்டிருந்த
ஆந்திரக் கீழக்கரைப் பகுதி கோல் கொண் டாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு வலிமையுடன் இயங்கியபின் 1687-ல் கோல்கொண்டா
அரசரும் தில்லிப் பேரரசரின் படையெடுப்புக்கு ஆளாய் நாடி ழந்தனர்.
 
     அகமது நகரின் அரசர் நிசாம்ஷாக்கள் ஆவர். முதல் அரசன் மாலிக் அகமத்
1489-ல் அகமது நகரைப் புதிதாக அமைத்துத் தனி யாட்சி ஏற்படுத்தினான். அவன்
மரபில் வந்த ஹு சேன் (1554-1565) அடிக்கடி பீஜப்பூருடன் போரிட்டான். அத்துடன்
அமையாது விசயநகரப் பேரரசைத் தலைக்கோட்டைப் போரில் நிலை குலையச்
செய்யவும் அவனே பெரிதும் காரணமாயிருந்தான். பகதூர் (1597-1600) ஆட்சியில்
தில்லிப் பேரரசன் அக்பர், அகமது நகர்மீது படையெடுத்தான். அரசன் இறந்த பின்னும்
அரசி சாந்த் பீபீ வீரத்துடன் போரிட்டு மாண்டாள். தென்னாட்டின் வீரமிக்க
பெண்ணரசிகளுள் சாந்த் பீபீ இடம் பெற்றாள். 1600-ல் அகமது நகரம் தில்லிப்
பேரரசில் இணைக்கப் பெற்றது.
 
     பீடார், பீரார் ஆகிய இரண்டு அரசுகளும் மிகக் குறுகிய காலமே தனியரசுகளாக
நிலவின. அவை விரைவில் அகமது நகர் அரசுடன் இணைந்துவிட்டன.
 
விசயநகரப் பேரரசு
 
     முசல்மான் படைவீரர்களின் ஆட்டூழியங்களாலும் பகமனிப்
பேரரசர்படையெடுப்புக்களாலும் தென்னாட்டில் மக்களிடையே