புகழ் உச்ச எல்லை அடைந்தது. அவர் காலத்தில் இப்பேரரசு கன்னட தெலுங்கு மொழி எல்லைகள் முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. தமிழகத்தில் மதுரையை ஆண்ட கம்பண உடையார் மரபினரும் பிற பகுதிகளிலுள்ள சோழபாண்டியத் தலைவர்களும் சேர நாட்டை ஆண்ட திருவாங்கூர் மன்னனும் பேரரசின் மேலுரிமையை ஏற்றிருந்தனர். |
கிருஷ்ணதேவராயர் தாமே தெலுங்கில் பெரும்புலவர். தமிழகத்தின் ஆழ்வார்களில் ஒருவரான நாச்சியார் மீது அவர் ஒரு காவியம் இயற்றினார். அவர் காலம் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலமாயிருந்தது. தெலுங்கு நாட்டில் மட்டுமின்றித் தமிழகத்திலும் மைசூரிலும் ஆண்ட மன்னர்கள்கூட இக்காலத்திலும் இதற்குப்பின் நெடு நாட்களும் தெலுங்கு மொழியையும் இலக்கியத்தையும் வளர்த்தார்கள். தெலுங்கின் பண்டைய உரைநடை இலக்கியமும், நாடக இலக்கியமும் சிறப்பாக மைசூர், மதுரை, தஞ்சை அரசர்களாலேயே உச்சநிலைக்குக் கொண்டு வரப்பட்டன. |
தெலுங்குக்கு அடுத்தபடியாகக் கன்னட இலக்கியமும் அதற் கடுத்தபடியாகத் தமிழ் இலக்கியமும் விசயநகர ஆட்சியில் தழைத்தன. தமிழ் இலக்கியத்துக்கும் தமிழகக் கோயில்களுக்கும் பேராதரவளித்தவர் கிருஷ்ணதேவராயருக்குப் பின் வந்த பேரரசரிடம் படைத்தலைவராகவும் அமைச்சராகவும் தமிழகத்தின் தண்டத்தலைவராகவும் இருந்த புகழ்பெற்ற தளவாய் அரியநாத முதலியார் ஆவர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் செப்பம் செய்து ஆயிரக்கால் மண்டபத்தைச் சீரமைத்த காரணத்தால் அவர் வீரச்சிலை அம்மண்டபத்தருகில் இடம் பெற்றது. |
கிருஷ்ணதேவராயருக்குப்பின் ஆண்ட அச்சுதராயர் காலத்தில் (1529-1542) தமிழகத்தில் பேரரசுக் கெதிரான கிளர்ச்சி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்தித் திருவிதாங்கூர் அரசன் தென்பாண்டி நாட்டைப் பாண்டியரிடமிருந்து கைக்கொண்டான். அச்சுதராயர் தாமே நேரடியாக வந்து கிளர்ச்சியை அடக்கியதுடன் |