பக்கம் எண் :

127
 
பாண்டிய இளவரசியை மணந்துகொண்டார். தமிழக முழுவதையும் மேலாட்சி செய்ய
அவர் விட்டலராஜர் என்ற படைத் தலைவரையும் அமர்த்தி விட்டுச் சென்றார்.
 
     அச்சுதராயருக்குப் பின்னும் தமிழகத்தில் பாண்டியர் சோழர் பூசல்கள் ஏற்பட்டன.
அதன் பயனாக நாகம நாயக்கன் என்ற தலைவன் மேலாளாக அனுப்பப்பட்டான். இவன்
புதல்வன் விசுவ நாதனே 1559-ல் மதுரை நாயக்க மரபின் முதல்வனானான்.
 
     1565-ல் தலைக்கோட்டைப் போருக்குப்பின் பீஜப்பூர் கோல்கொண்டா
வளர்ச்சியடைந்தது. விசயநகரம் தளர்ச்சியுற்றது. தலைநகரத்தையே இழந்து, பேரரசர்
தமிழகத் துணைத் தலைநகரமாக இருந்த சந்திரகிரியில் வந்திருந்து ஆண்டனர். தஞ்சை,
மதுரை, மைசூர் ஆகிய மூன்றிடங்களிலுமுள்ள தலைவர்கள் அரசராகி வலுப்பெற்ற பின்
பேரரசு வீழ்ச்சியடைந்தது.
 
மதுரை நாயக்க மன்னர்
 
     மதுரையில் நாயக்க மரபினர் 1559 முதல் 1736 வரை கிட்டத் தட்ட இரண்டு
நூற்றாண்டுகள் புகழுடன் ஆண்டனர். பாண்டியர் பழம்புகழுக்கு இவர்கள் பல வகையில்
புது மெருகு ஊட்டினர்.
 
     முசல்மான்கள் ஆட்சியால் அழிவுற்றிருந்த மதுரை நகரையும் கோயிலையும்
கோட்டை கொத்தளங்களுடன் முதல் நாயக்க மன்னன் விசுவநாத நாயக்கன் கட்டினான்.
வைகை ஆற்றுக்குப் பேரணை சிற்றணை என்ற அணைகள் கட்டிக் கால்வாய்கள்
வகுத்து ஆற்றின் இருகரைகளிலும் புதிய ஊர்களும் குடியிருப்புகளும் அமைத்தான்.
அவனுடன் தண்டநாயகராயிருந்த தளவாய் அரியநாத முதலியார் உதவியுடன்
கோயிலையும் கோட்டையையும் செப்பம் செய்து நாட்டாட்சிக்கான புதிய முறைகள்
வகுத்தான். இப்புதிய முறையே பாளையக்காரர் முறை ஆகும். இது பாண்டியப் பேரரசர்
காலப் பாளைய முறை போன்றதாயினும், அதைவிட விரிவான முறையில் அமைந்தது.
தமிழகமெங்கும் 72 கோட்டைகளும் அவற்றின் தலைமையில் 72