பாளையக்காரரும் அமைக்கப்பட்டனர். இவர்கள் பிரித்துத் திறைகட்டியதுடன், போர்க்காலங்களில் அரசனுக்கு உதவினர். பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் மரபு இப்பாளைய மரபுகளுள் ஒன்றே. பல சிற்றரசர்களும் பாளைய அமைப்பில் இணைக்கப்பட்டனர். இந்நாளையப் பெருநிலக்கிழவர் பலர் இப்பாளையக்காரரின் பின் மரபினரேயாவர். |
விசுவநாதனுக்குப்பின் ஆண்ட குமாரகிருஷ்ணப்பன் (1563-1573) காலத்தில் தும்பிச்சி நாயக்கன் என்ற பாளையக்காரன் தலைமையில் பாளையக்காரர் கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி அடக்கப்பட்டு, தும்பிச்சி நாயக்கன் தூக்கிலிடப்பட்டான். முத்துகிருஷ்ணப்பன் (1602-1609) இராமேசுவரத்துக்குச் செல்லும் யாத்திரிகர் நலனை எண்ணி இராமநாதபுரத்தில் சேதுபதி மரபினரைத் தலைவராக்கி, அப்பகுதியில் அமைதி நிலவச் செய்தான். |
மதுரை நாயக்க மரபினருள் தலைசிறந்தவன் திருமலை நாயக்கன் (1623-1659) ஆவான். இவன் வலிமைமிக்க மன்னன். அத்துடன் அவன் பேரரசனாகும் பேரவா உடையவனாயிருந்தான். ஆகவே பெயரளவில் இன்னும் விசயநகரப் பேரரசனுக்குச் செலுத்தப்பட்ட திறையை நிறுத்தி அவனை எதிர்த்தான். தஞ்சை மன்னரும் செஞ்சி மன்னரும் அவனுடன் சேர்ந்தனர். மைசூர் மன்னன் பேரரசர் பக்கம் இருந்தான். ஆனால் திருமலை நாயக்கனின் அரசியல் சூழ்சிகளால் பேரரசு விரைவில் விழுந்தது. தஞ்சை நாயக்கருக்கும் பல தொல்லைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் பீஜப்பூர், கோல்கொண்டாப் படைகள் புகுந்து மதுரைக்குத் தொல்லை விளைவித்தன. ஆயினும் திருமலை நாயக்கன் ஆட்சியில் பகைவர் மதுரைப் பக்கம் நாட முடியவில்லை. |
கட்டடங் கட்டும் கலையில் இராசராசன், இராசேந்திரன் ஆகிய சோழப் பேரரசருக்குப்பின் மிகச் சிறந்த தென்னாட்டரசன் திருமலை நாயக்கனே. அவன் கட்டடக் கலையின் அருமை |