தென்னாட்டுப் பழங்குடி இமயம்வரை பரந்து கிடக்கும் ஒன்றாகும். வடஇந்தியா என்று அழைக்கப்படும் இச்சமவெளிகளிலும், அதற்கு அப்பால் எகிப்து, சால்டியா முதலிய நாடுகளிலும், தென்னாட்டுப் பழங்குடி நாகரிகத்துக்கு இனமான நாகரிகங்கள் பரவியிருந்தன. ஆகவே தென்னாட்டின் பண்டைய நாகரிக எல்லை இமயங் கடந்த ஒன்றாகும். அது இன்றைய கீழ்நாட்டு நாகரிகத்துக்கும், பண்டைய நடு உலக நாகரிகத்துக்கும் மட்டுமன்றிப் புதிய மேலைநாட்டு நாகரிகத்துக்கும் மூல முதல் அடிப்படையானது எனலாம். | இக்காலங்களில் நில இயலையும் இன நாகரிக அடிப் படையையும்விட, மொழியே நாட்டின் அரசியல் எல்லையை வகுக்கப் பெரிதும் காரணமாயிருக்கிறது. உலகின் மிகப் பெரும்பான்மையான நாட்டுப்பிரிவுகளும் எல்லைகளும் பெரிதும் மொழியையே அடிப்படையாகக் கொண்டவை. தென்னாட்டிலும் நாட்டு எல்லை, மொழியடிப்படையாகவே வகுக்கப்படுதல் இயல்பு. ஆனால் மொழி அடிப்படையில் தென்னாட்டின் எல்லை நில இயல் எல்லையினும் சற்றுக் குறுகியதேயாகும். ஏனெனில் வடமேற்கிலிருந்து சிந்து கங்கை சமவெளியில் பரந்து பழங்குடி இனத்தவருடன் கலந்த அயலினங்களும், அயலின மொழிக் கலவைகளும் தென்னாட்டில் வடகிழக்குக் கோடியில் ஒரு சிறிதும் வடமேற்கில் பெரிதும் புகுந்து அப்பகுதியிலுள்ள மொழிகளை வட இந்தியத் தொடர்பு மிகுந்தவை ஆக்கின. எனவே மொழிச் சார்பில் தென்னாட்டின் வட எல்லை கோவாவிலிருந்து விந்திய மலையின் நடுப்பகுதி வரையிலும், அதிலிருந்து கஞ்சம் மாவட்டம் வரையிலும் உள்ள வளைகோடு ஆகும். | தென்னாட்டு மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசும் மொழிகள் திராவிட மொழிக்குடும்பமாக வகுக்கப்பட்டுள்ளன. விந்திய மலைப் பகுதியிலும், அதற்கு வடக்கேயும் தெற்கேயும் பல பண்படாத் திராவிட மொழிகள் | | |
|
|