உள்ளன. ஆனால், தென்னாட்டில் பெரும்பாலாகப் பேசப்படும் ஐந்து மொழிகளே சிறப்பு வகையால் திராவிட மொழிகளென்று அழைக்கப்பெறுகின்றன. ஏனென்றால் அவை கலையும் இலக்கிய வளமும் நிறைந்த பண்பட்ட மொழிகள். இம்மொழிகளுள் தென்கோடியில் தமிழும் மலையாளமும், வடபால் தெலுங்கும் கன்னடமும், இவற்றின் வடமேற்கு மூலையில் துளுவும் வழங்குகின்றன. |
நில இயல் அடிப்படையில் தென்னாட்டின் பரப்பு கிட்டத் தட்ட முந்நூறாயிரம் சதுர கி.மீ. மக்கள் தொகை ஏறத்தாழப் பத்துக்கோடி. ஆனால் மொழி அடிப்படையிலும் அரசியல் அடிப் படையிலும் திராவிடமொழி பேசப்படும் தென்னாடு அல்லது திராவிட நாட்டின் பரப்பு இருநூற்றைம்பதினாயிரம் சதுர கி.மீ. ஆகும். அதன் மக்கள் தொகை எட்டுக்கோடிக்கு மேலாகும். |
இதில் தமிழ் பேசுவோர் மூன்றுகோடி. தமிழ், திராவிடநாடு அல்லது தென்னாட்டுக்கு வெளியிலும் பேசப்படுகிறது. தெலுங்கு பேசுவோர் மூன்று கோடி; கன்னடம் பேசுவோர் ஒன்றே கால் கோடி; மலையாளம் பேசுபவர் முக்கால்கோடி; துளு பேசுவோர் பத்து நூறாயிரம். |
திராவிட மொழிகளில் அயலினச் சொற்களும் அயல் நாட்டு இலக்கியப் பண்புகளும் பின்னாட்களில் வந்து கலந்தன. ஆயினும் அவற்றின் அடிப்படைப் பண்புகள் இவற்றால் பாதிக்கப் படவில்லை. தவிர இவ்வெல்லா மொழிகளும் அயலின மொழிகளைவிடக் கலைவளமும் இலக்கிய இலக்கண வளங்களும் பழம் பெருமை உடையவைகளாகவே இருக்கின்றன. |
திராவிடமொழி இலக்கியங்கள் யாவுமே ஆயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழம்பெருமை உடையவை. தமிழில் இவ்வெல்லை கடந்து இன்னும் ஆயிர ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழம்பேரிலக்கியம் உண்டு. உலக மொழிகளில் ஆயிரக்கணக்கான |