பக்கம் எண் :

15

 
ஆண்டு தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியுடைய மொழிகள் திராவிட மொழிகளும்
சீன மொழியு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 
     திராவிடமொழிகளின் பழம்பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம்,
இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பாக
விளங்குவது தமிழ் மொழியே.
 
     தென்னாட்டிலிருந்து முதன்முதல் வெளியேறிச் சென்ற மக்கள்இனம் *ஃவின்னியர்,
சுவீடியர், ஹங்கேரியர் ஆகியவர்களே. இவர்கள் வடமேற்கு ஐரோப்பாவிலும் நடு
ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர். இவர்களையடுத்துப் பல நாடோடி இனத்தவர்கள்
சென்று அவர்களை நெருக்கித் தள்ளினர். நாகரிகமுற்ற மனித இனம் இதற்குத்
தெற்கேயுள்ள நடு உலகில் பரவிற்று. எனவே நடு உலகில் வரலாற்றுக்கு முற்பட்ட
காலத்தில் மனித நாகரிகம் உச்ச அளவு வளர்ச்சியடைந்து தழைத்தோங்கியிருந்தது.
அதன் சுவடுகள் வடஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா, தென் ஆசியா, நடு அமெரிக்கா
ஆகிய பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன. இவ்வூழியை மனித நாகரிகத்தின் ஒரு
பேரலையின் உச்சி முகடு என்னலாம். ஏனெனில் இதன்பின் இந்நாகரிகங்கள்
அழிவுற்றன. நாகரிகமற்ற புதிய இனங்களின் புதிய வளர்ச்சி தொடங்கிற்று. கி.மு. 2000
முதல் உலகின் வடதிசையில் உள்ள நாகரிகத்திற் பிற்பட்ட நாடோடி மக்கள் பேரளவில்
பெருக்கமுற்று. தெற்கு நோக்கி வந்து வளமான நாகரிகப் பகுதிகளைத் தாக்கினர்.
இத்தாக்குதல்கள் வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்தவை. முதலில் தாக்கிய மக்கள் இந்து -
ஐரோப்பியர் அல்லது ஆரியப் பெருங் குழுவினர் ஆவர். இவர்கள் நாகரிகமடைந்த
பின்னும், இவர்களைப் பின்பற்றி காத்தியர், விசிகாத்தியர், டேனியர், மங்கோலியர்,
தார்த்தாரியர், யூச்சி, குஷாணர், ஊணர் ஆகிய

*Finns (people of Finland)