காலத்தில் (1640-1674) தஞ்சை அரசு மிகத் தழைத்து இருந்தது. அரசன் நல்லாட்சித் திறனும் வீரமும் உடையவனாயிருந்தான். ஆனால் மதுரை நாயக்கன் சொக்கநாதன் தஞ்சையைத் தாக்கி முற்றுகையிட்டு வென்றான். அரண்மனைக் குள்ளிருந்து வெளிவந்து வீரமாகப் போரிட்டு விசயராகவனும் அவன் பிள்ளைகளும் மாண்டனர். சின்னஞ்சிறு கையேந்தலான செங்கமல தாஸு டன் அமைச்சன் வெங்கண்ணா தப்பிச் சென்றான். |
சொக்கநாதன் தன் தம்பி முத்து அழகிரியைத் தஞ்சையில் விட்டுச் சென்றான். முத்து அழகிரி தமயனுக்கு எதிராகத் தஞ்சையைத் தானே கைக்கொள்ள முனைந்தான். ஆனால் வெங்கண்ணாவின் முயற்சியால் செங்கமலதாஸின் சார்பில் பீஜப்பூர் அரசன் உதவி கோரப்பட்டது. பீஜப்பூர் படைத்தலைவனாக இருந்த சிவாஜியின் உடன்பிறந்தான் எக்கோஜி என்ற வெங்காஜி தஞ்சைக்கு வந்து அதைக் கைக்கொண்டான். செங்கமலதாஸு க்கு அவன் நாட்டைத் தர மறுத்துத் தஞ்சையில் மகாராஷ்டிர மரபை நாட்டினான். |
சிவாஜி எக்கோஜியிடம் தமிழக அரசில் பங்கு கோரி வந்து அவனைத் தோற்கடித்தான். ஆயினும் வேலூரில் தங்கி முடி சூட்டிக்கொண்டு அவன் திரும்பிச் சென்றான். |
1674 முதல் 18-ம் நூற்றாண்டின் இறுதிவரை மகாராஷ்டிர மரபு தஞ்சையை ஆண்டுவந்தது. பாஞ்சாலங்குறிச்சிப் போரின் பின் அரசுரிமையிழந்து இறையூதியம் பெற்று 1855-வரை நீடித்தது. அவ்வாண்டுடன் அது தொடர்பற்று முடிந்தது. தத்தெடுக்க முடியாமல் ஆங்கில ஆட்சி முதல்வர் டெல்ஹவுஸிப் பெருமகனார் தடை செய்தார். |
பிற தென்னாட்டு அரசுகள் |
சோழ பாண்டியராட்சி அளவுகூடச் சேரநாட்டின் ஆட்சி மரபுபற்றி நமக்குத் தொடர்பான வரலாறு கிட்டவில்லை. அதன் |