தென்கோடியான வேணாட்டில் மட்டுமே பழைய ஆய்குடியின் மரபினர் திருவிதாங்கூர் அரசர் என்ற பெயருடன் கிட்டத்தட்டத் தொடர்ச்சியாக ஆண்டு வந்தனர். மாலிக்காபூர் படையெடுப்பின் பின் இரவிவர்மன் குலசேகரன் என்ற திருவிதாங்கூர் அரசன் (1309-16) மலையாளக்கரை முழுவதையும் வென்று பாண்டிய சோழ நாடுகளையும் தன் கீழ்ப்படுத்தி 1316ல் காஞ்சியில் பேரரசனாக முடிசூட்டினான். ஆனால் விரைவில் ஹொய்சளர் படையெடுப்பினால் அவன் ஆட்சி கவிழ்ந்தது. அவன் உமா என்ற பாண்டிய இளவரசியை மணம் செய்திருந்தான். |
வீரராகவன் என்ற அரசன் 1320-ல் சிறிய கிறிஸ்தவ சமூகத் தினருக்குக் கோட்டயம் பட்டயங்களை அளித்தான். 15-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் வென்று மண்கொண்ட பூதலன் என்ற நான்காம் வீரவர்மனும் அந்நூற்றாண்டிறுதியில் (1595-1607) ஐந்தாம் இரவிவர்மாவும் ஆட்சி செய்தனர். |
18ம் நூற்றாண்டில் வேணாடு பல சிற்றரசுகளாகப் பிளவுபட்டி ருந்தது. திருவிதாங்கூர் அரசர் தென்கோடியை மட்டும் ஆண்டனர். மார்த்தண்டவர்மன் என்ற அரசன் இன்றைய திருவிதாங்கூர் எல்லை முழுவதையும் வென்று ஆண்டான். |
திப்பு சுல்தானை எதிர்த்தும் பாஞ்சாலங் குறிச்சிக் கிளர்ச்சியை எதிர்த்தும் திருவிதாங்கூர் அரசர் ஆங்கில வாணிகக் கழக ஆட்சியாளர்க்குச் செய்த உதவிகாரணமாக அவ்வரசு அவர்களின் நேசநாடு ஆயிற்று. |
மைசூர் அரசுகள் |
மைசூரில் ஹொய்சளர் ஆட்சி முடிவுற்றபின் 15-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஒரு சிற்றரசு தோன்றிற்று. விசயநகரப் பேரரசின் கீழ் இருந்த தலைவர்களை எதிர்த்து அம்மரபில் வந்த |