நான்காம் சாமராசன் தன் எல்லையைப் பெருக்கிக் கொண்டான். இராசாதிராசன் (1578- 617) சீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றி மைசூர் அரசு மரபின் முதல்வனானான். |
இரண்டாம் தொட்ட கிருஷ்ணன் காலத்தில் (1713-1731) தேவராசன் என்ற தளவாய் எட்டாம் சாமராசன் மூன்றாம் மும்மடி கிருஷ்ணன் ஆகியவர்களை அரசனாக்கி ஆட்டி வைத்தான். |
1716-ல் படைத்தலைவன் ஹைதர் அலி வலியமைற்ற ஆட்சியினைத் தன்வயப்படுத்தி ஆண்டான். அவன் ஆட்சியில் மைசூர் கிட்டத்தட்ட ஒரு பேரரசு என்ற நிலையில் வளர்ந்தது. ஆங்கிலேயர்களும் மற்றச் சிற்றரசர்களும் அவன் பெயர் கேட்டு நடுங்கினர். அவன் காலத்தில் நடந்த இரண்டு மைசூர்ப் போர்களில் அவன் சென்னை நகரையே தாக்கிச் சூறையாடினான். |
ஹைதரின் மகன் திப்பு ஐரோப்பாவில் எழுந்த ஃபிரஞ்சு வல்லரசு வீரன் நெப்போலியனுடன் நேச உறவு கொண்டு ஆங்கிலேயரை அடக்க நினைத்தான். ஆனால் அவன் அமைச்சன் பூரணய்யா ஆங்கிலேயருக்கு உள்ளாளாயிருந்து அவனை வீழ்த்தினான். மைசூருக்கு வெளியே திப்பு ஆண்ட பகுதிகளில் கோயமுத்தூர், சேலம் மாவட்டங்களும், மதுரையும் ஆங்கிலேயர் கைப்பட்டன. இராயலசீமாப்பகுதி நிஜாமுக்குத் தரப்பட்டு அவனால் பின் ஆங்கிலேயருக்கு வழங்கப்பட்டது. |
ஹைதர்காலத்துக்கு முன்னிருந்த பழைய யாதவ மரபின் அரசின் நான்காம் மும்மடி கிருஷ்ணனின் புதல்வன் பத்தாம் சாமராசன் திப்புக்குப் பின் ஆங்கிலேயரால் அரசனாக்கப்பட்டான். அவன் மரபினர் இறுதிவரை மைசூரை ஆண்டு வந்தனர். |
மராட்டியர் ஆட்சி |
மேலைச் சாளுக்கியரும் இராஷ்டிரகூடரும் ஆண்ட தென்னாட்டு வடமேற்குக் கோடியிலுள்ள மராட்டியரை 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீரசிவாஜி நாட்டார்வம் ஊட்டி ஒரு |