பக்கம் எண் :

135
 
நாட்டினமாக்கினான். அவன் வைணவ சமயத்திலும் ஊன்றிய பற்றுடையவன். ஆயினும்
வைணவ அடியார்களைவிட, வினைமுறைச் சடங்குகளின் பெயரால் சாதி உயர்வு தாழ்வு
நாட்டிய புரோகிதர்களின் பிடியில் அவன் மிகுதி சிக்குண்டு. அவர்களின் சிலந்தி வலைக்
கட்டுகளுக்கு உள்ளானான். கொங்காணத்தில் ஓர் அரசும் தஞ்சையில் ஓர் அரசும் அவன்
முயற்சியாலும் அவன் குடியினர் முயற்சியாலும் ஏற்பட்டது. ஆனால் தஞ்சையரசு ஒரு
சிற்றரசாயிற்று. கொண்காண அரசு சதாரா, கோலாப்பூர் என்ற இரண்டு அரசுகளாக மாறின.
 
     தில்லிப் பேரரசுகளை எதிர்த்தும் தென்னாட்டு முசல்மான் அரசுகளிடையே அரசியல்
சூதாட்டமாடியும் இரு பேரரசுகளை அமைக்க சிவாஜியின் அமைச்சராயிருந்த புரோகிதர்
உதவினர். அவர்கள் உறவினரும் நண்பரும் எல்லாத் தென்னாட்டு அரசுகளிலும் கால்
பாவியிருந்தனர். ஆனால் சிவாஜி முடிசூட்டு விழாவை எதிர்த்தும், வேள்விகள், புரோகித
தானங்கள் ஆகியவற்றில் பணத்தைக் கொட்டியும் புதிய அரசின் வலுவைக் குறைக்க
அவர்கள் வற்புறுத்தினர். சிவாஜியின் பின் மரபினர் காலங்களில் அவர்கள் இதனுடன்
அமையாது, அரசரைக் குடியிலும் இன்பங்களிலும் ஈடுபடுத்தித் தாமே ஆட்சி நலங்களைச்
சூறையாடினர். ஆட்சியை இவ்விளம் பேரரசின் சார்பில் கைக்கொண்ட அமைச்சர்களே
பேஷ்வாக்கள்எனப்பட்டனர்.
 
     பேஷ்வாக்களின் ஆட்சியின்போது மராட்டியப்பேரரசு பாமனிப் பேரரசைப் போலவே
சிந்தியா, ஹோல்கார், பரோடா, கெய்க்வார், பான்ஸ்லே ஆகிய ஐந்து அரசுகளாகப்
பிரிந்தன.இவைகளும் வலுவுடையவையாகவே இருந்தன. ஆயினும் அவை அமைச்சர்களின்
அரசியல்சூழ்ச்சிகளால் ஒற்றுமை நாட்டும் வலுவிழந்து ஆங்கிலேயர் ஆட்சிக்கு
ஒவ்வொன்றாகஇரையாயின.
 
கருநாடகப் போர்கள்
 
     ஆங்கிலஆட்சி தென்னாடு முழுவதும் பரவக்காரணமாயிருந்த