நிகழ்ச்சிகள் கருநாடகப் போர்களேயாகும். பெயரளவில் இது தென்னாட்டு அரசர்களின் அரசுரிமைப் போராட்டமாயிருந்தது. ஆனால் ஆங்கிலேயரும், ஃபிரஞ்சுக்காரரும் இருபுறமும்இருந்து அதைத் தங்கள் ஆதிக்கப்போராகத் திருப்பினர். |
ஃபிரஞ்சுக்காரரிடம் இப்போது டியூப்ளே என்ற ஒப்பற்ற வீர அரசியல் தலைவன் இருந்தான். அவன் தமிழரைப் படை வீரராகப் பயிற்றுவித்துப் போர் வெற்றி காண முயன்றான்.ஆங்கிலேயர் அரசியல் சூழ்ச்சிகளில் வல்லவர். அவர்களிடையே புதிதாய் எழுந்தவீரத்தலைவன் கிளைவ் டியூப்ளேயின் முறைகளை அவனைவிடத் திறமையாகக் கையாண்டான். அத்துடன் ஆங்கில அரசியலார் இன்னோருண்மையை நன்கறிந்து கொண்டனர். தென்னாட்டை வீழ்த்தத் தென்னாட்டு வீரர் உதவியை விடத் தென்னாட்டு அமைச்சர், மற்ற அரசியல் சூதாடிகள் ஆகியவர்கள் உதவி மிகவும் பயன்படுவது என்பதை அவர்கள் கண்டுகொண்டனர். போர்ச்சுக்கீசியர் முதலிய தொடக்க கால வெள்ளையர் தங்கள் சமயத்தைப் பரப்ப எடுத்துக்கொண்ட முயற்சியைவிட, தென்னாட்டுச் சமயத்தையே ஆட்டிப்படைத்த புரோகிதர்களைத் தம் வயப்படுத்துவது அரசியலில் மிக்க பயன் தரும் என்றுஅவர்கள் கண்டனர். இக்காரணங்களால் ஃப்ரஞ்சு ஆதிக்கம் தாண்டி ஆங்கிலேயர் ஆதிக்கம்விரைவில் பரந்தது. |
மதுரை நாயக்க மரபில் இறுதியில் நடைபெற்ற அரசுரிமைப் பூசலைப் பயன்படுத்தி ஆர்க்காட்டை ஆண்ட இஸ்லாமிய அரசன் மதுரையைக் கைக்கொண்டான். ஆனால் மதுரையை வெல்ல அனுப்பப்பட்டசந்தாசாகீபு அவ்வரசன் உறவினன். அவன் மதுரையைத் தன் தனியாட்சியாக்க முற்பட்டான். தில்லிப் பேரரசின் உரிமைப்படி ஆர்க்காட்டு அரசனின் மேலாளாக அமைந்தவன் நிஜாம் அரசன். அவன் 1740-ல் தன் ஆளான அன்வருதீன் என்பவனை ஆர்க்காட்டு அரசனாக்கினான். சந்தாசாகிபு அவனை ஆம்பூர்ப் போரில் எதிர்த்துக் கொன்றான். அத்துடன் நிஜாம் இறந்தவுடன் அந்த ஆட்சிக்கும் தன் ஆட்பேரை |