பக்கம் எண் :

137
 
அனுப்பத் துணிந்தான். நிஜாம், ஆர்க்காடு இரண்டும் அவன் வசமாயின.
 
     சந்தா சாகிபுக்கு ஃபிரஞ்சுக்காரர் உடந்தையாயிருந்தனர். தமிழகம் முழுவதும் அவன்
கைப்பட்டது. இதை உணர்ந்த ஆங்கி லேயர் நிஜாமில் எதிர் உரிமையாளரையும்
ஆர்க்காட்டில் பழைய அரசனின் மகன் மகமதலியையும் ஆதரித்தனர். கிளைவின்
வீரத்தாலும் அரசியல் திறத்தாலும் மகமதலி வெற்றிபெற்றான். தமிழக முழுவதும்
ஆங்கிலேயர்வசப்பட்டது. ஆயினும் மகமதலி மூலமாகவே ஆட்சி நடைபெற்றது.
 
     தென்னாட்டிலிருந்து ஆங்கிலேயரை ஒழிக்க ஹைதரும் திப்புவும் திட்டமிட்டனர்.
ஆனால் மூன்றாம் மைசூர்ப்போர், நான்காம் மைசூர்ப் போர் என்ற இரண்டும் மைசூர்ப்
போர்களின் பின் திப்பு அழிந்து விட்டான். அதன்பின் திப்புவுடன் தொடர்பு
கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மகமதலியிடமிருந்து நாடு கைப்பற்றப்பட்டது.
 
பாஞ்சாலங் குறிச்சிப் புரட்சி
 
     சந்தாசாகிபு மதுரையைக் கைப்பற்றியிருந்தாலும் அவன் ஆட்சி தென்பாண்டிய நாட்டில்
முழுதும் எட்டவில்லை. மகமதலியின் பெயரால் அவன் மீது ஆதிக்கம் செலுத்த
ஆங்கிலேயர்முற்பட்டனர். தளவாய் அரியநாத முதலியாரின் மரபில் வந்த சில
பெருங்குடிமக்களையும்திருவாங்கூர் அரசரையும் வேறு சில சிற்றரசர்களையும் அவர்கள்
வசப்படுத்தினர்.சிற்றரசர்க்குச் சிற்றரசர் இருந்த பகைமை இதை எளிதாக்கிற்று. ஆனால்
பாண்டிய மரபின்பெயரையும் குருதியையும் வீரத்தையும் தமதாக்கியிருந்த பாஞ்சாலங்
குறிச்சித் தலைவர் கட்டபொம்மனும் அவன் துணைவர், உறவினரான ஊமைத்துரை
முதலியவர்களும் கிளர்ந்தெழுந்துவீரப் போராற்றினர். தற்காலப் படைக்கலங்களும்
வெளிநாட்டு ஆதிக்க வாய்ப்பும்பெற்றிருந்தும், அவர்களை அடக்கி ஒழிக்கப்