பிரிட்டிஷாருக்குப் பல ஆண்டுகள் பிடித்தன. கடைசிப் போராட்டங்கள் 1798-ல் தொடங்கி 1801-லேயே முடிவுற்றன. |
ஆங்கில ஆட்சியை எதிர்த்த தென்னாட்டுப் போர்கள் மைசூர்ப் போராட்டமும் பாஞ்சாலங் குறிச்சிப் பேராட்டமும் மட்டுமேயாகும். முன்னது ஒரு தென்னாட்டு மன்னனின் கடைசி விடுதலைப்போர். பின்னது தென்னாட்டு மக்களின் முதல் விடுதலைப்போர். சிந்து கங்கை வெளியில் ஆங்கில ஆட்சி விரிந்தபின் இவ்விரண்டு போர்களின் எதிரொலியாக 1857-ல் அப்பகுதியின் முதல் விடுதலைப் போர் நடைபெற்றது. ஆனால் தென்னாட்டு விடுதலைப் போரில் ஆங்கிலேயர் பெற்ற அனுபவத்தால், பின் வந்த அந்தப் போரை அவர்கள் எளிதில் அடக்க முடிந்தது. |
தென்னாட்டில் ஆங்கில ஆட்சியின் கீழ்ச் சிற்றரசராக விடப்பட்ட நாட்டரசர்கள் பாஞ்சாலங் குறிச்சிப் போரில் ஆங்கில ஆட்சிக்கு உடந்தையாயிருந்தவர்களும், மைசூர்ப் போரில் கலவாதிருந்த பழைய மன்னர் மரபோருமேயாவர். சிந்து வெளியிலும் 1857 விடுதலைப் போரில் கலவாமல் அதற்கெதிராயிருந்த நாட்ட ரசர்களே நீடித்தனர். |
1857-க்குப் பின் தென்னாடும் சிந்துகங்கை வெளியும் ஒரே ஆங்கில ஆட்சியின் கீழ் வந்தன. பலுசிஸ்தான், பர்மா, இலங்கை ஆகியவைகளுடன் ஏடன், அந்தமான் போன்ற கடல் கடந்த இடங்களும் அவற்றுடன் சேர்ந்து ஆங்கில அல்லது பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு என்று அழைக்கப்பட்டன. |
அணிமைக்கால இலக்கியம் |
அணிமைக்காலம் தமிழ் இலக்கியத்தில் மூன்று புதிய துறைகளாகப் பரந்தது. 12-ம் நூற்றாண்டில் மெய்கண்டாரும் அவர் பின்வந்த அறிவுத் துறைச் சமய ஆசிரியர்களும் சைவசித்தாந்தக் கருத்துக்களை மெய்நூல்களாக வகுத்தனர். பழைய பக்தித் துறை ஆசிரியர்கள் அல்லது சமயாசிரியர்களால் பாடல் பெற்ற |