பக்கம் எண் :

151
 
உயர்ந்திருந்தது. ஆனால் அது இச்சமநெறியைப் போதிய அளவு பேணவில்லை.
ஆகவேதான் உயர்ந்தது தாழ்ந்தது. தாழ்ந்தது உயர்ந்தது. கதிரவன் வழியையும்
இயற்கையின் வழியையும் கண்டு தமிழகமும் தென்னாடும் தம்நலம் பேண உலக நலமும்
உலக நலம் பேணத் தம்நலமும் வளர்ப்பனவாக! பண்டைப் பெருமையினின்று
இன்றையப் பொதுமையும் நாளையப் புதுமையும் ததும்பத் தென்னாட்டவராகிய நாம்
பாடுபடுவோமாக!